பக்கம்:கற்சுவர்கள்.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

of 50 கற்சுவர்கள்

மீண்டும் உத்தரவாதம் அளித்தார். பேசும்போது குருக் களும் கூட இருக்க வேண்டும் என்று தனசேரன் அவரிடம் வற்புறுத்தினான். .

r "ரொம்ப நல்லதாப் போச்சு இதில் அவருக்குத் தெரியக் கூடாத இரகசியம் ஒன்றும் இல்லை. அவர் தாராள மாக இருக்கலாம்" என்றாள் அவள். :

3. அவர்கள் பேச்சு அரைமணி நேரத்தில் முடிந்துவிட்டது. கான்வெண்ட் பள்ளிகளின் வழக்கமான ஸ்கூல் யூனிஃபாரம் அணிந்த கோலத்தில் ஒர் எட்டு வயதுச் சிறுவனின் அழகிய 'சிறு புகைப்படம் ஒன்றை எடுத்துத் தனசேகரனிடம் காண் பித்தாள் அந்த இளையராணி, அந்தச் சிறுவன் துறு துறு வென்று மிகவும் அழகாகத் தோன்றினான். அன்ை கண்கள் ஒளி நிறைந்திருந்தன. . . .

இவன் உங்கள் தம்பி இவனுக்கு ஒன்பது வயதா கிறது. ராஜாவுக்கு என்னிடம் பிறந்த குழந்தை. அரண் மனைச் செலவில் கொடைக்கானலில் உள்ள ஓர் ஆங்கில ரெசிடென்ஷியல் ஸ்கூலில் தங்கிப் படித்துக்கொண்டிருக் கிறான். இவனைத் தவிர இந்த உலகில் எனக்கு ஆறுதல்

அளிப்பவர் இப்போது வேறு யாருமில்லை. நான் உயிர் வாழ்வதே இவனுக்காகத்தான். ராஜாவிடம் காலில் விழுந்து கெஞ்சிக் கதறி இவனைக் கொடைக்கானலில் சேர்த்துப் படிக்க வைத்திருக்கிறேன். நீங்கள் இங்கிருந்து எல்லா இளையராணிகளையும் பணம் கொடுத்து வெளி யேற்றப் போவதாகப் பேச்சுக் காதில் விழுகிறது. என்னைப் பொறுத்தவரை நான் இங்கிருந்து வெளியேறினால் பிச்சை எடுத்தால்கூடமானமாகப் பிழைத்துக்கொள்வேன். எனக்கு நீங்கள் பணம் கொடுக்காவிட்டால்கூடப் பரவாயில்லை. ஆனால் இந்தப் பிள்ளையினுடைய படிப்புக் கெடக்கூடாது. யாராவது-ஏதாவது, "உனக்கென்ன்டா கான்வெண்ட் படிப்பு வேண்டிக் கிடக்கிறது. ராஜாவோட வைப்பாட்டி மகனை எல்லாம் கான்வெண்டில் படிக்க வைத்துக் கட்டுப் படி ஆகாது. போடா வெளியே!' என்பதுபோலப் பேசி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/152&oldid=553124" இலிருந்து மீள்விக்கப்பட்டது