பக்கம்:கற்சுவர்கள்.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 155

வழுவாக நீடிக்க அவன் விரும்பவில்லை. சாதாரண மக்களையும் தங்களையும் வேறுபடுத்திக் காட்டும் இடைவெளியாக அரண்மனையில் கற்சுவர்கள் உயர்ந்து நிற்பதை அவன் அடிக்கடி சிந்தித்தான். அந்தச் சுவர்களும் மதில்களும் ஆதிக்க உணர்வின் அடையாளங்களாக அவ னுக்குத் தோன்றின. ஆயிரக்கணக்கான, லட்சக்கணக் கான, கோடிக்கணக்கான மக் க ளி ைட .ே ய இருந்து தங்களைத் தனியே பிரித்தும், உயர்த்தியும் காட்டிக் கொள்ளவே அந்த மதிற்கவர்கள் எழுப்பப்பட்டிருப்பதாக அவனுக்குப்பட்டது. சொப்பனம் முடிந்த பிறகும் கடன் பட்டாவது அதைத் தொடர்ந்து காண விரும்பினார் அவன் தந்தை, அவனோ அரச வாழ்வு, அரண்மனைச் சுகங்கள் என்ற சொப்பனங்களையே வெறுத்தான். அதிலிருந்து விடுபட விரைந்து விரும்பினான்.

'தம்பி! உங்கப்பாவுக்கு முத்தின தலைமுறையிலே பெரியவங்க கலைகள், புலவர்களையாவது வளர்த்தாங்க. உங்கப்பா அதைக்கூடசி செய்யலே. வெறும் ரேஸ் குதிரை களைத்தான் வளர்த்தாரு. சினிமா எடுக்கறேன்கிற பேரிலே, பொம்பிளைங்கள்னு அலைஞ்சாகு. காசை வாரி இறைச்சாரு. இப்படிப்பட்ட சமஸ்தானாதிபதிகளையும், சமஸ்தானங்களையும் விட்டு வைக்கிறதைவிட ஒழிச்சதே நல்லதுதான். ஒரு பணக்காரச் சோம்பேறிக் கூட்டம் யாருக்கும் பயன்படாமே நாட்டிலே வீணா வாழறதுலே என்ன பிரயோசனம்?' என்று லாமாவே ஒரு நாள் அவ னிட ம் ஆத்திரமாகப் பேசியிருந்தார். - -

தோழில் செய்து உழைத்து லாபம் சம்பாதிப்பது மாமாவுக்குப் பிடிக்கும். ஆனால் பணம் முடக்கப்பட்டுச் சோம்பிக் கிடப்பதோ அவருக்கு அறவே பிடிக்காது. பணமோ, முதலீடோ மூலதனமோ பயனின்றித் துருப் பிடிக்கக் கூடாது என்ற கருத்து உடையவர் அவர். அவ ருடைய இந்த எண்ணம் தனசேகரனுக்கும் உடன்பாடுதான். இதில் மாமாவோடு அவனுக்கு இரண்டு அபிப்பிராய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/157&oldid=553129" இலிருந்து மீள்விக்கப்பட்டது