பக்கம்:கற்சுவர்கள்.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

15 6 கற்சுவர்கள் மில்லை. அரண்மனையையும் சமஸ்தானத்தையும் உடன்ே கலைத்து விடுவதால் யார் யார் பாதிக்கப்படுவார்கள் என்று சிந்தித்தபோது அதிலும் சில மனிதாபிமானப் பிரச்னைகள் குறுக்கிட்டன. தயவு தொட்சண்யங்கள் வந்தன. - "- - - -

அங்கிருந்து வேலையைவிட்டுக் கணக்குத் தீர்த்து அனுப்புகிறவர்களைப் பற்றிய பிரச்னை வந்தபோதுதான் மாமாவுக்கும் தனசேகரனுக்கும் பலத்த வாதப் பிரதிவாதங் હ૯ir எழுந்தன. சொத்து மதிப்பீட்டையும், கடன் மதிப்பீட் டையும் தனித்தனியே கணக்கெடுக்குமாறு இருவருமே காரியஸ்தரிடம் தெரிவித்தார்கள். "ராஜமான்யம் நிறுத்தப் பட்ட தினத்திலிருந்தே அவர் க ள் வேலையிலிருந்து நிறுத் இப்பட்டிருக்கவேண்டும் என்பதால் அரண்மனையோடு சம்பந்தப்பட்ட பணியாளர்கள் பலர் இதுவரை அவர்களை வேலைகளில் தொடர்ந்து தங்கவிட்ட இற்காகவே நன்றி செலுத்தவேண்டும்:ன்றார் மாமா. அவர்கள் பிரச்னையை அவ்வளவு கறாராகவும் நிர்த்தாட்சண்யமாகவும் அணுகு வது சரியில்லை என்றான் த:ைசேகரன். சட்டப்படி..அவர் களில் பலருக்கு நாம் காம்பென்சேஷன் தருவதற்குக் கடமைப்பட்டிருக்கவில்லை என்றார் மாமா. இதைச் சட்டப்படி அணுகுவதை விட மனிதாபிமானக் கண்ணோட் இதில் அணுகுவதுதான் சரியாயிருக்கும் என்றான் தன மாமாவின் நோக்கங்களில் தனக்கோ தன் குடும்பத்தினருக்கோ பாதகமான எதுவும் இருக்க முடியாது என்பது தனசேகரனுக்குப் புரிந்திருந்தாலும் சமஸ்தானப் பணிகளில் இருந்த அப்பாவிகள் யாரும் பாதிக்கப்பட்டு விடக் கூடாது என்பதில் அவன் கவனமாக இருந்தான், தந்தையின் ஊதாரிக் குணங்கள் அவனுக்கு அறவே இல்லை என்றாலும், குடும்பத்தின் பரம்பரையான பெருந்தன்மைக் குணம் வேண்டிய மட்டும் இருந்தது. . . .

இளையராணிகளைத் தவிரச் சம்பளத்துக்கும். மானி யத்துக்கும் வேலை பார்க்கிற அனைவரையும் தனித்தனியே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/158&oldid=553130" இலிருந்து மீள்விக்கப்பட்டது