பக்கம்:கற்சுவர்கள்.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த் தசாரதி 1 57

வரச் சொல்வி அவரவர் அபிப்ராயங்களை நேரிலேயே கேட்டு முடிவு செய்து விடவேண்டும் என்பது தனசேகரனின் அபிப்பிராயமாக இருந்தது. -

"இதேல்லாம் காதும் காதும், வச்சாப்போல இரகசிய மாக முடிய :ேண்டிய விஷயம். பேச்சு வார்த்தைகள் னு தொடங்கிட்டா நாள் கணக்கிலே மட்டுமில்லே, மாதக் கணக்கிலே எல்லாம் ஜவ்வு மாதிரி இழுபடும்' என்றார் կք:ք: ԼՁII . - -

சரியோ, தப்போ, இந்த அரண்மனையையும் சமஸ் தானத்தையுமே நம்பிப் பரம்பரை பரம்பரையா இங்கே இருந்திட்டவங்களைத் திடீர்னு கணக்குத் தீர்த்து வீட்டுக்கு அனுப்பறது நல்லதில்லை. அவங்க எதிர்கால வாழ்க்கையைப்பற்றி நாம் கொஞ்சம் கவலைப்பட்டுத்தான் ஆகணும் என்று தனசேகரன் வற்புறுத்தினான்.

அவசியமில்லாத தயவுகளும் கருணைகளும் பல சமயங்களில் நிர்வாகத்துக்கு இடைஞ்சலான விஷயங்கள் தனசேகரன்! நீ ரப்பர் எஸ்டேட் மானேஜரா இருந்த போதும் உன்னோட தயவுகள், கருணைகள் எல்லாம் உனக்கு அங்கே நிர்வாக இடையூறுகளாக இருந்ததை நான் கவனிச்சிருக்கேன். இப்போ அரண்மனை விஷயத்திலேயும் அதே கஷ்டம்தான். நிர்வாகம்கிறது கூரான தராசு முள் மாதிரி. நேராக நிமிர்ந்து நிற்கும் கூரான தராசு முள் மேலே வேறே எதுவும் தங்கி நிற்க முடியாது நிறுக்கப்பட வேண்டிய விஷயங்கள் கீழே தட்டில்தான் இருக்கவேண்டும். நீயோ நிறுக்கிற முள் மேலேயே பாரத்தை ஏற்றிக்கொண்டு நிறுப்பதற்கே சிரமப்படுகிறாய். நிர்வாகி என்பவன் கறாராக இருக்க வேண்டும். இளகிய உள்ளமும், தயங்கிய எண்ணமும் நிர்வாகத்திற்குப் பெரிய இடையூறுகள் இதை நீ திருத்திக் கொள்ளாவிட்டால் வாழ்க்கையில் பின்னால் சொம்பக் கஷ்டப்பட வேண்டியிருக்கும்' என்று மாமா விசனப்பட்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/159&oldid=553131" இலிருந்து மீள்விக்கப்பட்டது