பக்கம்:கற்சுவர்கள்.pdf/163

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 6 i

உள்நாட்டிலும் எல்லாருக்கும் இப்போதுள்ள பணக் கஷ்டத்தில் பெரிய ராஜா இறந்த பின் இனிமேல் யாருக்கும் எதுவும் அனுப்ப இயலாது. அவரவர்கள் அங்கங்கே ஒய்வு நேரத்தில் முடிந்த மட்டும் உழைத்துச் சம்பாதித்து அதைக் கொண்டு மேற்படிப்பை முடித்துக்கொள்ள வேண்டியது. தான். வேறு வழி இல்லை-என்பது போல் தலைமைக் குமாஸ்தாவின் கையொப்பத்துடன் சுற்றறிக்கையைப் போல் ஒரு கடிதமும் அனுப்ப ஏற்பாடு செய்துவிட்டிருந்: தார் மாமா. - * - 3. . . .

கொடைக்கானலில் ரெஸிடென்ஷியல் பள்ளியில் படிக்கும் அந்தச் சிறுவனின் பெயரை மட்டும் சுட்டிக் காட்டி, "இந்தப் பையனுக்கு மட்டும் இப்படிக் கடிதம் அனுப்பவேண்டாம்! வழக்கம் போல் பணத்தை அனுப்பி விடுங்கள். மாமா கேட்டால் நான் வந்து சொன்ன விவரத்தைக் கூறுங்கள்' என்று தனசேகரன் தலைமைக் குமாஸ்தாவிடம் தெரிவித்தான்.

'உத்தரவுங்க! நீங்க சொன்னபடியே செய்கிறேன்" என்று குமாஸ்தா அதை ஒப்புக்கொண்டார். தனது இந்தச் செய்கையின் மூலம் மாமாவின் சிக்கன நடவடிக்கை களில் குறுக்கிட்டுத் தான் ஒரு சர்ச்சைக்கு வழி வகுக் கிறோம் என்று தனசேகரனுக்குத் தோன்றினாலும், சம்மந்தப்பட்ட இளையராணியிடமும் தட்சிணாமூர்த்திக் குருக்களிடமும் தான் கொடுத்த வாக்கைக் காப்பாற்றி விட்டோம் என்று அவனுக்குத் திருப்தியாயிருந்தது. தலைமைக் குமாஸ்தாவோ அரண்மனை அலுவலகத் தினரோ தனசேகரன் அந்த ஒரு தனிக் காரியத்தில் மட்டும் அக்கறை காட்டி அங்கே தேடி வந்ததைத் தவறாக நினைக்கவோ சந்தேகப்படவோ இல்லை. కొణి ? ராஜாவே பொறுப்போடு தேடி வந்திருக்கிறார் என்று பெருமையாகத்தான் நினைத்தார்கள். மரியாதையாகவும் நடந்து கொண்டார்கள். அவன் கேட்காமலே வேறு சில ஃபைல்களையும் அவனிடம் காண்பித்து அவை சம்பந்தமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/163&oldid=553135" இலிருந்து மீள்விக்கப்பட்டது