பக்கம்:கற்சுவர்கள்.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1 6.2 : கற்சுவர்கள்

என்ன முடிவு எடுப்பது என்றும் விசாரித்தார்கள். அவனும் தான் தேடி வந்தது பொதுப்படையாக இருக்கட்டும் என்று காண்பித்துக் கொள்ள விரும்புகிறவனைப் போல அந்த ஃபைல்களையும் பார்த்தான். அரை மணி நேரத்துக்கு மேல் அரண்மனை அலுவலகத்தில் செலவழித்துவிட்டு வந்தான். தன் தாய்க்கு உதவியாகவும் அனுசரணையாக வும் இருந்த இளையராணிக்குத் தான் இப்படிப் பதிலுக்கு உதவ முடிந்ததில் அவனுக்குப் பெருமையாக இருந்தது. தூண்டித் துளைத்து ஆதியோடு அந்தமாக விசர்ரிக்காவிட் டாலும் மாமா பின்னால் இந்தக் கொடைக்கானவில் படிக்கும் பையனுக்கு மட்டும் தான் விதிவிலக்கு அளித்திருப் பதைப்ாற்றி விசாரிப்பார் என்று தனசேகரன் எண்ணி னான். அவன் நினைத்தது சரியாக இருந்தது. அவன் அரண்மனைக் காரியாலயத்துக்குப் போய் விட்டுத் திரும்பிய சிறிது நேரத்திற்கெல்லாம் மாமா அங்கே போயிருப்பார் போலிருக்கிறது. அரண்மனை அலுவலகத்தினரிடமும் தலைமைக் குமாஸ்தாவிடமும் அவர் விசாரித்தபோது தன சேகரன் வந்ததையும் கொடைக்கானல் ரெஸிடென்ஷியல் ஸ்கூலில் படிக்கும் ஒரு பையனுக்கு மட்டும் வழக்கம்போல் மணியார்டரை அனுப்பி விடச் சொல்லி அவன் உத்திர விட்டதையும் அவர்கள் சொல்லி இருக்கவேண்டும். மாமா அடுத்த சிலமணி நேரங்களில் அவனைச் சந்தித்தபோது நேரடியாக உடனே இதைப் பற்றிக் கேட்கவில்லை என் றாலும் பெரிய ராஜாவின் இன்ஷஅரன்ஸ் தொகையைக் கேட்டுப் பெறவேண்டும் என்பதைக் கூறிவிட்டு வேறு பல விஷயங்களைப்பற்றியும் விசாரித்த பின் சுற்றி வளைத்து இந்த விஷயத்துக்கு வந்தார். இறுதியில் தனசேகரனிடம் நேரிடையாகவே அவர் கேட்டார். - -

"ஆமாம்! அதென்ன யாரோ ஒரே ஒரு பையனுக்கு மட்டும் கண்டிப்பாகப் பணம் அனுப்பனும்னு அரண்மனை. ஆபீஸ்லே சொல்லிவிட்டு வந்தியாமே! கடன் தீர்க்க வேண்டிய பாக்கிகள் நிறைய இருக்கு. பணக் கஷ்டமோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/164&oldid=553136" இலிருந்து மீள்விக்கப்பட்டது