பக்கம்:கற்சுவர்கள்.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 167

மோட்டார் போட்டுப் பாசன வசதி பண்ணி முன்ளே கிடைச்சதைவிட நாலு மடங்கு மகசூல் கிடைக்கிற அசல் நஞ்சை நிலமா அதை இப்போ மாத்தியிருக்கேன். இப்போ போயி நீங்க அதைத் திருப்பிக் கேட்டா எப்படி?’’

மாமா விட்டு விடவில்லை. "சரி! நீங்க சொல்ற :படியே செஞ்சிருக்கீங்கன்னு வசிசுக்கலாம். டெவலப் மெண்டுக்காக" நீங்க கையிலேருந்து செலவழிச்சிருக்கிற தொகைக்கும் ஒரு கணக்குக் கொடுங்க. அடமானத் தொகை, வட்டி, உங்க சொந்தச் செலவு எல்லாத்துக்குமா தாங்க பணம் திருப்பிக் கொடுத்துடறோம். நிலத்துக் விடுதலைப் பத்திரம் எழுதிக் கொடுத்துடுங்க.' , , -

"அதெப்படிங்க? இத்தினி வருஷம் கழிச்சு?' என்று

இழுத்தார் மிராசுதார்.

ஒழுங்காத் திருப்பிக் கொடுக்கிறதா இருந்தால் உங்களுக்குச் சேர வேண்டியதை வாங்கிக்கிட்டுக் கொடுங்க. இல்லாட்டி கோர்ட் மூலமாச் செய்ய வேண்டியதைச் செய்துக்கும். நானும் விவகாரஸ்தன். சுலபமா விட்டுட மாட்ட்ேன்' என்றார் மாமா. - રુ

கடைசியில் அந்த மிராசுதார் வழிக்கு வந்தார். கோவில் நிலங்கள் ஒழுங்குபடுத்தப்பட்டன. பெரிய ராஜா, வின் இன்ஷ்யூரன்ஸ் தொகை மொத்தம் பத்து லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் வந்தது. மாமாவைப் பொறுத்த, வரை பத்து லட்சத்து எழுபதாயிரம் என்பது ஒரு பெரிய தொகையே இல்லை. சொந்த முயற்சியால் உழைத்து: முன்னேறிப் பல லட்சங்களைச் சம்பாதிக்கவும் செலவழிக்க. வும் சகஜமாக பழகியிருந்தார் அவர். பத்து லட்சத்து எழுப. தாயிரம் ரூபாயில் கொஞ்சம்கூட மீதப்படுத்த வேண்டும். என்ற ஆசையே இல்லாமல் தந்தையின் கடன்களை அடைப் பதிலும் ஊழல்களை ஒழுங்கு செய்வதிலும் அக்கறையாக இருந்த தனசேகரனின் கடமையுணர்வு காரியஸ்தருக்கே வியப்பை அளித்தது. பெரிய ராஜாவையும், அவர் மகனான

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/169&oldid=553141" இலிருந்து மீள்விக்கப்பட்டது