பக்கம்:கற்சுவர்கள்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.நா. பார்த்தசாரதி - is

தனர். அப்படி ஏற்பட்ட பேரன்மார்களில் சிலர் மகா ராஜாவின் சடலத்தருகே நெய்ப்பந்தம் பிடிக்க வேண்டும் என்றார்கள். -

காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வைக்கு இந்த நெய்ப் பந்தப் பிரச்னையில் சில தர்மசங்கடங்கள் ஏற்பட்டன. அவர் காரியஸ்தராகப் பதவி ஏற்றபின் அந்த அரண்மனை யில் ஏற்பட்ட முதல் பெரிய சாவு இதுதான். அதனால் பல விஷயங்களை எப்படிச் செய்வது என்பதில் அவருக்கு முன் அனுபவம் எதுவும் கிடையாது. நெய்ப்பந்த விஷயம் பின்னால் சொத்து வகையில் ஏதாவது தகராறுகளைக் கிளப்பிவிடுமோ என்று அவர் பயந்தார். தனசேகரனும் அவனுடைய தாய்வழி மாமாவும் வந்தபிறகு அவர்களைக் கேட்டுக் கொண்டபின் நெய்ப்பந்த விஷயம் பற்றி முடி சொல்லலாமா இப்போதே சொல்லலாமா என்று அவர் தயங்கினார். ஏனென்றால் இறுதிக் கிரியைகளின் ஒவ்வொரு பகுதிக்கும் மகாராஜாவின் சொத்துக்களுக்கு உரிமை கொண்டாடுவதிலும் தொடர்பு இருந்தது. "என் பேரன் நெய்ப்பந்தம் பிடித்தான். அதனால் அவனுக்கு இன்ன சொத்துச் சேர்ந்தாக வேண்டும் என்று பின்னால் ஒவ்வோர் இளைய ராணியும் இதைச் சுட்டிக் காட்டி உரிமை கொண்டாட வந்துவிடக் கூடாதே என்று பயமாக இருந்தது. பெரிய கருப்பன் சேர்வைக்கு. அதனால் தானே நெய்ப் பற்சித்தை மறுத்ததாக இருக்கக் கூடாதென்று அதற்குப் போலீஸ் அதிகாரிகளின் உதவியை நாடினார் அவர். -

"நீங்கள் முதல்லே இறுதி ஊர்வலத்துக்கு எட்டு வீதி கிடையாது. நாலு ராஜ வீதி மட்டும்தான்னு முடிவு பண்ணுங்க. அப்புறம் நெய்ப்பந்த விஷயத்தைக் கவனிக் க. லாம் என்றார் அதிகாரி, -

போலீஸ் அதிகாரிகளின் பெயரைப் பயன்படுத்தி, "எட்டு ராஜவீதி கிடையாது. நாலு ராஜவீதி தான். நெய்ப்பந்தத்துக்கு அநுமதி இல்லை' என்று இரண்டை.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/17&oldid=552990" இலிருந்து மீள்விக்கப்பட்டது