பக்கம்:கற்சுவர்கள்.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

168 கற்சுவர்கள்

தன்சேகரனையும் தனக்குள் ஒப்பிட்டுப் பார்த்தார்" காரியஸ்தர். இவ்வளவு பெருந்தொதை ஒரே சமயத்தில் கிடைத்தால் காலஞ்சென்ற பெரிய ராஜா உடனடியாது. என்னென்ன ஊதாரித்தனமான செலவுகளை எல்லாம் செய்வார் என்பதைச் சிந்தித்தார் அவர். இப்போது தனசேகரன் அந்தத் தொகையை எவ்வளவு பொறுப் பாகவும் கட்டுப்பாடாகவும் செலவு செய்கிறான் என்பதை யும் அவரே பார்த்தார்.

இளைய ராணிகள் பிரசினை விவாதத்துக்கு வந்த். போதும் தனசேகரன் தாராளமாக நடந்து கொண்டான். கணக்கு வழக்குப் பார்க்கவில்லை. முன்னால் தயங்கியது. போலத் தயங்கிக் கூசிக் கொண்டிருக்காமல் தனசேகரனும் மாமாவும், காரியஸ்தரும், இள்ை ய் ராணிகளின் சகோதரர் கள், பெற்றோர். உறவினர்கள் என்ற வகையில் வெளியே இருந்து கடிதம் எழுதி வரவழைக்கப்பட்டிருந்த சிலருமாகஅரண்மனை அந்தப்புரத்திற்கே சென்று விஷயங்களைப் பேசி முடித்தார்கள். . . . . . . . . . .

வயதில் இளையவர்களும், மூத்தவர்களும், நடுத்தரப் பருவத்தினருமாகப் பல பெண்களை ஒருசேர உட்கார்த்தி வைத்து அவர்களிடையே பேசி முடிவு செய்வது பெரும் பாடாக இருந்தது. காரியஸ்தர் ஓர் அதிகாரிபோல: மட்டுமே நடந்து கொண்டார். அதற்கு மேல் அதிகமாக தனசேகரனின், குடும்ப விஷயங்களிலோ, அரண்மனை அந்தப்புரத்துப் பெண்கள் விஷயத்திலோ அவர் நெருங்கி வந்துதலையிடத் தயாராயில்லை. அந்தப் பேச்சு வார்த். தைகளில் எல்லாருடைய அபிப்ராயமும் விட்டுப் போகாமல் குறிப்பெடுத்துக் கொள்வதற்காக ஸ்டெனோகிராபர் ஒருவரும் வரவழைக்கப்பட்டிருந்தார், அரண்ம ைன நிர்வாகத்தினரின் சார்பில் தொகுத்துச் சொல்ல வேண்டிய வற்றை அவர்களிடம் தான் சொல்லுவதா அல்லது மாமா வைச் சோல்ல விடுவதா என்று யோசித்தான் தனசேகரன். மாமாவைப் பேசவிட்டால் அங்கிருப்பவர்களின் மனம் புண்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/170&oldid=553143" இலிருந்து மீள்விக்கப்பட்டது