பக்கம்:கற்சுவர்கள்.pdf/176

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

174 கற்சுவர்கள்

அவற்றை அமைத்துப் பீமநாதபுரம் நகர நிர்வாகத்தின் கீழ், ஒரு பூங்காவோடு சேர்த்து வைப்பதற்கு ஒப்படைத்து விடலாம் என்றான்.

க்ளர் நலனில் அவனுக்கு அக்கறை இருந்தது புலப்பட் டது. அரண்மனையில் கடத்த சில ஆண்டுகளில் படிப்படி யாகச் சமையற்காரர்களும், தவசிப்பிள்ளைகளும் குறைக் கப்பட்டிருந்தாலும் இப்போதுகூட அவர்களின் எண்ணிக்கை. ஒரு டஜனுக்கு மேல் இருந்தது. அவர்களில் பலர் கணக்குத் தீர்த்துக்கொண்டு போக மனமின்றி ஸெண்டிமெண்ட லாகத் தயங்கி நின்றார்கள்.

'சின்னராஜா மெட்ராஸ்லே படிச்சுக்கிட்டிருந்தப்போ வீவுக்கு வருவீங்க. மல்லிகைப்பூ மல்லிகைப்பூவா இட்லியும் வெங்காயச் சட்னியும் வேணும்னு ஆசைப்படுவீங்க. இந்தக் கையாலேதான் அதை எல்லாம் படைச் சிருக்கேன். அதுக் குள்ளே அதெல்லாம் மறந்திடிச்சா?' என்றான் தலைமைத் தவசிப்பிள்ளை மாரியப்பன். எதுவும் மறந்து டலே. மாரியப்பன்! இப்போ கூட நாங்க கணக்குத் தீர்த்து உனக்குக் கொடுக்கப்போற பணத்தை வச்சு நீ கீழ ரத விதி யிலேயோ மேலரத வீதியிலேயோ ஒரு இட்லிக்கடை போட்டா அதுக்கு நானும் ஒரு நிரந்தர வாடிக்கைக்காரனா இருப்பேன். உன்னைப் போலத் தரமான உழைப்பாளிக்கு என் ஆதரவு நிக்சயம்ா உண்டு' என்று மலர்ந்த முகத்தோடு பதில் கூறினான் தனசேகரன்.

பெரிய ராஜாவைப் போல நீங்களும் சீரும் சிறப்புமா இந்தச் சமஸ்தானத்தைத் தொடர்ந்து ஆளுவீங்கன்னு: நினைச்சோம்' என்றார் மற்றொரு முதியவர். தனசேகர னுக்குச் சிரிப்பு வந்தது, அதே சமயத்தில் அத்தனை பேருக்கும் முன்னிலையில் தந்தையை விட்டுக் கொடுத்துப் பேசுவது மாமாவுக்குப் பிடிக்காது என்றும் தோன்றியது.

பொதுவாக மறுமொழி கூறினான் அவன். -

'நீங்கள் ளாம் நியூஸ்பேப்பர் படிக்கிறீங்களா இல்லி யான்னே தெரியலே. உங்களுக்கு எல்லா விஷயமும் நானே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/176&oldid=553149" இலிருந்து மீள்விக்கப்பட்டது