பக்கம்:கற்சுவர்கள்.pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 17.5

அனா ஆவன்னாவிலேருந்து தொடங்கிச் சொல்ல வேண்டி யிருக்கு. இப்போ மட்டும் இல்லே, இதுக்கு ரொம்ப வருஷங்: களுக்கு முன்னாலேயே சமஸ்தானம்னு எதுவும் கிடையாது. அரசாங்கம் சமஸ்தானங்களை நீக்கிச் சட்டம் போட்டாச்சு. கவர்மெண்ட் கொடுத்த உதவித் தொகையை வச்சுக்கிட்டு எங்கப்பா தானாகச் சமஸ்தானம்கிற வெள்ளை யானையை இத்தனை நாள் கட்டி மேச்சுக்கிட் டிருந்தாரு காஷ்மீரத்திலே இருந்து கன்யாகுமாரி வரைக் கும் இந்த தேசத்தை இப்போ அரசாங்கம்தான் ஆட்சி செய்யிது. எந்தச் சமஸ்தானமும், ஜமீனும், தனி ராஜாங்க மும் இதிலே கிடைகாது. இதை நீங்க முதல்லே புரிஞ்சுக் கணும். கடன் வாங்கி ராஜா வேஷம் போடறதைவிடத் தொழில் செய்து ஏழைப் மானமாப் பிழைக்கலாம். இனிமே நாங்க உங்களையும் ஏமாத்தப்பிடாது எங்களை யும் ஏமாத்திக்கக் கூடாது' இவ்வாறு தனசேகரன் கூறிய விளக்கத்தைச் சிலர் மிகவும் சரியாகப் புரிந்துகொள்ளாமல் "சின்னராஜா ரொம்பத்தான் சிக்கனமா எல்லாத்தையும் மிச்சம் பிடிக்கப் பார்க்கிறாரு. செலவு செய்ய மனசு ஆகலே' என்று புது வி த மா கத் தங்களுக்குள்ளே வியாக்கியானம் செய்யத் தலைப்பட்டார்கள். வேறு சிலர். 'சின்னராஜா தங்கமானவர். அவருக்கு இளகின மனசு. இதற்கெல்லாம் அந்த மலேயாக்காரருதான் துண்டுதல். அவரு பக்கா வியாபாரி. அரண்மனையையே காலி பண்ணி வித்துடச் சொல்லி அவருதான் யோசனை சொல்லிக், கொடுத்திருக்காகு" என்று பேசிக் கொண்டார்கள்,

குதிரைக்கார ரஹிமத்துல்லா கையெழுத்துப் போட்டுப் பணத்தை வாங்கிக் கொண்டு, அதோடு திருப்தி அடைந்து விடாமல், "நம்பளுக்கு இரண்டு குதிரை கொடுங்க. ஜட்கா வண்டி விட்டாவது பிழைச்சுக்கலாம்னு பார்க்கிறேனுங்க" என்று வேண்டியபோது தனசேகரனுக்கு என்ன பதில் சொல்வதென்று தெரியவில்லை. முதல் முறையாக மாமா இறக்கிட்டார். 'ஏம்ப்பா? இப்படியே ஒவ்வொருத்தரும்: கேட்டா என்ன ஆகும்? தவசிப்பிள்ளை எனக்குப் பத்துப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/177&oldid=553150" இலிருந்து மீள்விக்கப்பட்டது