பக்கம்:கற்சுவர்கள்.pdf/178

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

፫ 78 கற்க்வர்கள்

பன்னிரண்டு பர்த்திரம் கொடுங்க. சமைச்சுப் பிழைக் கறோம்பாரு. ஹெட்கிளார்க் டைப் டைரட்டிங் மிஷினைக் குடும்பாரு. யானையைக் குடுத்திடணும்பான். நீ கேட்கிறது உனக்கே நல்லா இருக்கா?" -

குதிரைக்காரன் சிரித்துக்கொண்டே போய்ச் சேர்ந் தான். அரண்மனை ஊழியர் யூனியன் தனசேக்ரன்ை எதிர்க்கவில்லை. ஏனெனில் தனசேகரனே நியாயமான நஷ்டஈட்டுத் தொகையைக் கொடுக்க முடிவு செய்திருந்: தான். அவனுடைய பெருந்தன்மையும் பரந்த மனப் பான்மையும் அவர்கள் தகராறுக்கு வழி இல்லாமல் செய்து விட்டது. நஷ்டஈட்டுத் தொகையைத் தவிர இரண்டு மாதச் சம்பளத்தையும் கையில் கொடுக்க ஏற்பாடு செய்திருந்தான் தனசேகரன், மாமாவுக்கும் அவனுக்குமே இதில் கருத்து வேறுபாடு இருந்தது. மாமா சொன்னது இதுதான்.

'தம்பீ! சட்டப்படி கணக்குத் தீர்த்து அனுப்பறதுக்கு இது ஒண்ணும் ஹோட்டலோ, லிமிடெட் கம்பெனியோ இல்லை. ஒரு பெரிய வீட்டிலே வேலைக்கு வச்சிருந்தவங் களை நீக்கி அனுப்பறோம். அவ்வளவுதானே? இரண்டு மாசச் சம்பளம் மட்டுமே கொடுத்தால் கூடப் போதுமே?”

"பணத்தைத் தலையிலேயா சுமந்திட்டுப் போகப் போறோம் மாமா? இத்தினி வருஷமா இங்கே வேலைக்கு இருந்தவங்க வெளியிலே போறப்ப வயிறெரிஞ்சுக்கிட்டுப் போகறது நல்லா இருக்காது.". . • * - "சரி! நீ நினைக்கிறபடிதான் செய்யேன்.நான் ஒண்னும் இதில் தலையிடலே' என்று அதை அவன் போக்கில் விட்டு விட்டார் மாமா. ஆனால் அவன் போக்கில் முற்றிலும் விட்டு விடாமல் தாமே பொறுப்பு எடுத்துக்கொண்டு அவர் வேறோர் ஏற்பாட்டைச் செவ்வனே செய்து வந்தார். அது தான் தனசேகரனின் திருமண ஏற்பாடு, அந்த அரண்மனை எல்லையில் அந்தக் குடும்பத்தைச் சேர்ந்த மங்கல வைபன். .மாக அது இருக்கட்டும் என்று நினைத்தார் அவர். இனி .எதிர்காலத்தில் அந்த அரண்மனை எல்லையில் இப்படிப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/178&oldid=553151" இலிருந்து மீள்விக்கப்பட்டது