பக்கம்:கற்சுவர்கள்.pdf/179

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 17 7

பெரிய ராஜா வைபவங்கள் என்று எதுவும் நடைபெறுவதற். இல்லை என்பது அவருக்குப் புரிந்துதான் இருந்தது. தன் சகோதரிக்கும் காலஞ்சென்ற மகாராஜாவுக்கும் திருமணம் நிகழ்ந்த காலத்தில் இந்த அரண்மனையும். இந்த ஊரும் இதன் சுற்றுப்புறங்களும் திருவிழாக்கோலம் பூண்டிருந்ததை யும் அதை ஒட்டிய கோலாகலங்களையும் மாமா நினைவு கூர்ந்தார். கலகலவென்று இருந்த ஒர் அரண்மனை நாளா வட்டத்தில் எப்படி ஆகி விட்டது என்பதை எண்ணிய போது பல உணர்வுகள் மனத்தைப் பிசைந்தன. அவர் ஒரளவு முந்திய தலைமுறையைச் சேர்ந்தவராக இருந்தமை யால் வைடங்கள், விழாக்கள். கோலாகலங்கள் இவற்றைப் பற்றிய அவருடைய எண்ணங்கள், எதிர்பார்த்தல்கள் எல்லாமே அந்தப் பழைய தலைமுறைக்கு ஏற்றபடி இருந். தன. பழைய இனிய நினைவுகளில் ஆழ்வதையும் கழிவிரக் கப்படுவதையும் தவிர்க்க முடியாமல் சிரமப்பட்டார் அவர். பணக்கஷ்டமும் தந்தை வைத்துவிட்டுப் போன கடன்களு. மாகத் தனசேகரன் சிரமப்படுவது பொறுக்க முடியாமல் தான் அவர் அரண்மனையையும் சமஸ்தானத்தையும் கலைத்துவிட உடன்பட்டாரே ஒழிய மனப்பூர்வமாக

இசைந்திருக்கவில்லை.

- 都 姆

தன் மகளுக்கும் அவனுக்கும் திருமணம் நடக்கிறவரை யாவது அரண்மனை சமஸ்தான்ம் என்ற அலங்கார ஏற்பாடு: கள் தொடரவேண்டும் என்ற நினைவு அந்த்ர்ங்கமாக அவருக்குள்ளே இருந்தது. ஆனால் தனசேகரனுக்காக அவர் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.

பாங்கில் அடமானம் வைத்திருந்த பீமவிலாசம் பிரிண்டிங் பிரஸ் விஷயம் அடுத்து அவர்கள் கவனத்துக்கு வந்தது. பாங்குகாரர்களையே பிரஸ்ஸ்ை ஏலத்துக்குவிடச் சொல்லி அவர்களுக்குச் சேரவேண்டியதை எடுத்துக் கொண்டு மீதத்தைத் தரச் சொல்லிக் கேட்கலாம் என்றார். 盘邀护拉姆荔”、 . r

"பிரஸ் எனக்குத் தேவையாயிருக்கும் என்று தோன்று. கிறது மாமா? நாமே கடனையும் வட்டியையும் திருப்பிக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/179&oldid=553152" இலிருந்து மீள்விக்கப்பட்டது