பக்கம்:கற்சுவர்கள்.pdf/184

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

1.82. கற்சுவர்கள்

தனசேகரனோ ஒர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது" என்ற கதையில் படித்த கதாநாயகனின் மனநிலையில் அப் போது இருந்தான். அவனுடைய இலட்சியத்தில் அந்த அரண்மனையின் எதிர்காலம் பற்றிய ஒரு முடிவு ஏற்பட்டி ருந்தது. அதை அவன் மெல்ல மெல்ல முயன்று உருவாக்கிச் சாதனை செய்து கொண்டிருந்தான். .

16

- அத்த இளையராணியைச் சந்திப்பதற்காகத் தன

சேகரன்தட்சிணாமூர்த்திக் குருக்கள் வீட்டுக்கு என்றைக்குச் செல்ல முடிவு செய்திருந்தானோ அன்று மாமாவே அங்கு வந்துவிட்டதால் குருக்கள் தனசேகரனை அன்று தன் இல்லத்துக்கு வரவேண்டாம் என்று சொல்லி அனுப்பி விட்டார். மாமா கல்யாண முகூர்த்தம் அமைக்கும் வேலையாகத் தட்சிணாமூர்த்திக் குருக்களிடம் போயிருந் த்ார். _ . . . : . - .

அதற்கு அடுத்த நாள். காலையில் கோயிலுக்குத் தரிசனத்துக்குப் போவதுபோல் போய்விட்டுக் குருக்கள் வீட்டிற்குச் சென்றான் தனசேகரன். . . . . . . . . . . . .

அந்த இளையராணி தன் மகனுக்குப் பணம் நின்று போகாமல் தொடர்ந்து அனுப்ப ஏற்பாடு செய்ததற்காக முதலில் அவனுக்கு நன்றி சொன்னாள். அப்புறம் தனக்கு வழங்கப்பட்ட செக்கையும் வீடுகட்டிக் கொள்வதற்கான மனையையும் பற்றி அவனிடம் பிரஸ்தாபித்தாள் அவள்.

எல்லார் முன்னிலையிலும் எல்லாருக்கும் கொடுத் தாற் போன்ற செக்கையும். நிலப் பட்டாவையும் எனக்கும் கொடுத்துக் கணக்குத் தீர்த்து விட்டீர்கள். மற்ற வர்களுக்கு முன்னால் உங்களை விட்டுக் கொடுத்து நடந்து, கொள்ளக் கூடாதே என்றுதான் அவற்றை நான் வாங்கிக் கொண்டேன். கணக்குத் தீர்த்துப் பணமும் வீட்டுமனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/184&oldid=553157" இலிருந்து மீள்விக்கப்பட்டது