பக்கம்:கற்சுவர்கள்.pdf/185

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 183

யும் கொத்து விட்டிர்கள். கணக்குத் தீர்த்துப் பணமும், விட்டு மனையும் வாங்கிக்கொண்டு இங்கிருந்து போய்விட வேண்டும் என்று நான் தவிக்கவில்லை. இந்த அரண்மனை யில் பெரியராஜாவுக்கு அம்மி மிதித்து அருந்ததி பார்த்து வாழ்க்கைப்பட்டவளைப்போல்தான் நான் நடந்துகொண் டிருக்கிறேன். இனிமேலும் அப்படித்தான் நடப்பேன். இந்தாருங்கள், உங்களுடைய செக் கும் நிலப்பட்டாவும் தயவுசெய்து திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். என்னை உங்கள் சின்னம்மாவாகவும், ராஜசேகரனை அதாவது என் மகனை உங்கள் இளைய சகோதரனாகவும் மட்டும் நடத் துங்கள், போதும். இதை எல்லாம் எடுத்துக்கொண்டு நான் எங்கும் போகப் போவதில்லை. எனக்குப் போல் இடத ஏது? சாகிறவரை இங்கேதான் விழுந்து கிடப்பேன். இங்குத் தான் சாவேன்.' .

இந்தச் சொற்களைச் சொல்லும்போது அவள் ஏறக் குறைய அழுகிற நிலைக்கு வந்து விட்டாள்.அவள் கண்கள் நெகிழ்ந்து சரம் பளபளத்தன. இந்த உணர்ச்சி மயமான நிலையை எப்படி எதிர் கொள்வதென்று ஒரிரு கணங்கள் தனசேகரனுக்குப் புரியவில்லை. சிறிது தயக்கத்திற்குப் பின் அவன் சொன்னான் :

"உங்கள் மனநின்லயை நான் மதிக்கிறேன் அம்மா அதனால் தான் விதிவிலக்காக உங்கள் மகன் ராஜசேகர னுடைய படிப்புக்கு மட்டும் தொடர்ந்து பண்ம் அனுப்பச் சொல்லி ஏற்பாடு செய்தேன். அதற்காக என் மாமா விடமும் காரியஸ்தரிடமும் நான் பொய்கூடச் சொல்லும் படி நேரிட்டது. என் தந்தையின் டைரியில் உங்களைப் பற்றி மட்டும் விசேஷமாக எழுதியிருந்தது என்று சொல்லிச் சமாளித்திருக்கிறேன். உங்களுக்காக இதை எல்லாம் மனப் பூர்வமாகத்தான் நான் செய்திருக்கிறேன். ஆனால் அதற் காக வெளிப்படையாய் உங்களை மட்டும் தனியாய் நடத்தித் தனிமரியாதை செலுத்த முடியாத நிலையில் நான் இருப்பதற்காக நீங்கள் என்னை மன்னிக்க வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/185&oldid=553158" இலிருந்து மீள்விக்கப்பட்டது