பக்கம்:கற்சுவர்கள்.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 86 கற்சுவர்கள்

"மதிலை உடைக்கச் சொல்லித்தான் அணைக். கட்டுக்குக் கல் விற்கப் போகிறேன். அதுக்காகத்தான். அவங்களை வரச்சொல்லியிருக்கேன் மாமா!' -

'உனக்குப் பைத்தியம் பிடிச்சிருக்கா என்ன? கல் மதிலை எதுக்காக உடைக்கிறது? ஆகாக் காரியம்ல்ாம் வேண்டாம்பா. ஊரையும். அரண்மனையையும் பிரிப்பதே கற்சுவர்கள்தான். அதை உடைச் சாச்சுன்னா ஊருக்கும் அரண்மனைக்கும் நடுவே ஒரு தடுப்பும் இல்லாமலே போயிடும். பழைய காலத்திலே எதிரிகள், கொள்ளைக் காரங்ககிட்ட இருந்தெல்லாம் இந்த அரண்மனையை அந்தச் சுவர்கள்தான் காப்பாத்தியிருக்கு, அதைப் போய். யாராவது உடைப்பாங்களா?” - . . . .

'ஊருக்கும் அரண்மனைக்கும் நடுவே தடுப்பு எதுவும் இனிமே இருக்கக் கூடாதுங்கறதுக்காகத்தானே இந்தச் சுவர்களை எல்லாம் உடைக்கச் சொல்றேன். இந்தச் சுவர் கள் வெளியே இருந்து இதற்குள்ளே திருடர்கள் வராமல் பாதுகாத்தது என்பதைவிட உள்ளே இருந்த திருடர்களை வெளியே வசித்தவர்களிடமிருந்து, அதாவது பறி கொடுத்தவர்களிடமிருந்து பறித்தவர்களைக் காப் பாற்றியிருக்கிறது என்பதே இ ப் போது சரியான வாதம். மாமா! சுரண்டப்பட்ட மக்களிடமிருந்து சுரண்டிய வர்க்கத்தைப் பிரித்துத் தனியே பாதுகாத்து வைத்த சுவர்கள் இவை. வெளியே என்ன நடக்கிறது. என்பதை உள்ளே உழைக்காமல் சுகபோகங்களில் மிதந்து கொண்டிருந்தவர்களுக்கும் உள்ளே என்ன நடக்கிறது. என்பதை வெளியே சிரமப்பட்டுக் கொண்டிருந்த பல லட்சம் மக்களுக்கும் தெரிய விடாமல் உயர்த்திக் கட்டப் பட்ட உறுதியான சுயநலச் சுவர்கள் இவை. பழமையை யும் சுரண்டுகிறவர்களின் சொந்த நலனையும் பாதுகாக்க இப்படி ஆயிரம் ஆயிரம் கற்சுவர்கள் இந்நாட்டில் எங்கெங்கோ எது எதற்கோ போடப்பட்டிருக்கின்றன். இன்றும், இனி என்றும். அந்தச் சுவர்களுக்கு அவசிய மில்லை. -- . . . . .”

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/188&oldid=553162" இலிருந்து மீள்விக்கப்பட்டது