பக்கம்:கற்சுவர்கள்.pdf/190

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 88 கற்சுவர்கள்

போகிறாய்?' என்று புதுச் சந்தேகத்தைக் கிளப்பினார் அவர். - - "ஜனங்கள் விரும்பினால் அவற்றை விட்டுவிடலாம். அவை பெரிய பிரச்னை இல்லை. மரத்தடி, மதிற் சுவர். திறந்த வெளி எல்லாவற்றையுமே இந்நாட்டில் கோவி லாக்கி விடுகிறார்கள். அதனால் எங்கும் எதுவும் செய்ய முடியாமற் போகிறது மாமா.” - w

தந்தையின் நாட்குறிப்புக்கள் அவனை இப்படி மாற் றினவா? அல்லது அவன் படித்த வேறு புத்தகங்கள் அவனை இப்படி மாற்றினவா? என்பது மாமாவுக்குப் பெரிய புதிராக இருந்தது. -

அவன் பேசிய விதத்திலிருந்து மதிற்கவர்களை எடுத்து விட்டு அரண்மனையை ஊர்ப் பொதுச் சொத்தாக்க உத்தேசித்திருப்பது போலப்பட்டது. மாமா அதை எதிர்த்து வாதிடவில்லை. - . . . . .

மறுநாள் காலையில் ஷா அண்ட் படேல் இன்ஜினியரிங் கம்பெனி ஆட்கள் வந்தார்கள். அவர்களுக்கு மதிற்கவர் களைச் சுற்றிக் காட்டினான் தனசேகரன். தாங்கள் விரும்பிய ஒரிடத்தில் மதிற் சுவரிலிருந்து சில கருங்கற்களை உடைத்துப் பார்த்துக் கொண்டார்கள் அவர்கள், அணைக் கட்டுக்கு என்று புதிதாக ஒரு மலையைத் தேடிப் போய் வெடி மருந்துக்கும் வேலை ஆட்களுக்கும் செலவழித்துக் கொண்டிருப்பதை விட இந்தக் கற்சுவர்களையே பிரித்து உபயோகப் படுத்திக் கொள்ளலாம் என்று அந்தக் கம்பெனி யின் இன்ஜீனியர்கள் இணக்கமான ஒரு முடிவுக்கு வந்தார்கள். -

அன்று காலை தனசேகரன் அவர்களை அழைத்துக் கொண்டு அரண்மனை மதிற்சவர்களைச் சுற்றிக் காட்டு வதற்குப் புறப்பட்டபோது மாமா அவர்களோடு உடன் செல்லவில்லை. -

காரியஸ்தருக்கும் அது பிடிக்கவில்லை என்றாலும் உத்தியோகம் கருதி அவர் உடன் செல்ல வேண்டியிருந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/190&oldid=553164" இலிருந்து மீள்விக்கப்பட்டது