பக்கம்:கற்சுவர்கள்.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 189

விரைவில் பேசி முடிவு செய்யலாம் என்று கற்களை விற்க இருந்தவர்களும் வாங்க இருந்தவர்களும் தீர்மானித்தனர். சுவர்களைப் பிரித்துக் கற்களைச் சேகரித்துக் கொள்ளும் வேலையைக் கம்பெனியாரே செய்து கொள்ள, வேண்டும். தன்னால் அது நிச்சயமாக முடியாது என்று தனசேகரன் கூறிவிட்டான். * - . . . . . . . . . . . . . .

சுற்றுப்புறத்து ஏழை விவசாயிகளின் பல லட்சம் ஏக்கர் நிலங்களுக்குப் பாசன வசதி செய்து தரக்கூடிய ஓர் அணைக்கட்டுக்கு அந்தக் கற்கள் உபயோகமாகப் போகின்றன என்று எண்ணியபோது தனசேகரனுக்குப் பெருமையாக இருந்தது. மதில்களை உடிைக்கத் தொடங்கு வதற்கு நாள் குறித்தாகிவிட்டது. கற்களுக்கு விலையாக ஒரு பெருந்தொகை தருவது என்றும் உடன்படிக்கை செய்து கொண்டாயிற்று. ... - ... . . . . . . .

உடன்படிக்கையில் இருவருமே எழுதிக்கொள்ள மறந்து விட்ட ஒரு பிரச்னை முதல் நாளே வந்து குறுக் கிட்டது. தோண்டத் தொடங்கிய முதல் இடத்திலேயே பழைய தங்க நாணயங்கள் நகைகள் அடங்கிய ஒரு பெரிய பித்தளைக்குடம் புதையலாகக் கிடைத்தது.

என்ஜீனியரிங் கம்பெனியார் அது தங்களுக்குத்தான் சொந்தம் என்றார்கள். மாமாவும் காரியஸ்தரும் நிச்சய மாக அது அரண்மனைச் சொத்தாகையால் தனசேகரனைத் தான் சேரும் என்றார்கள்.

தகவல் படிப்படியாகப் பரவித் தோண்டி எடுத்த இடத்தில் ஒரு பெருங்கூட்டமே கூடிவிட்டது. பத்திரிகை களிலும் செய்திகள் படத்துடன் பிரசுரமாகிவிட்டன. இன்னும் பல இடங்களில் தோண்டும்போது இப்படியே மேலும் பல புதையல்கள் கிடைக்கக்கூடும் என்று ஜனங்கள் பேசிக் கொள்ளத்தொடங்கி இருந்தார்கள். தனசேகர ன் அந்தப் பிரச்னையை எப்படி முடிவு செய்கிறான் என்பதை அறிவதில் எல்லாருமே ஆவல் காட்டினார்கள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/191&oldid=553165" இலிருந்து மீள்விக்கப்பட்டது