பக்கம்:கற்சுவர்கள்.pdf/197

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 195:

சேகரன்.பரிமேய்ந்த நல்லூருக்குப் போகவில்லை. கோவில் விஷயம் என்பதனால் வயதும் அநுபவமும் மிக்க மாமாவும். காரியஸ்தரும் போனாலே போதும் என்று தனசேகரன். நினைத்திருந்தான். இந்த நிலையில்தான் சென்னையி விருந்து கோமாளிஸ்வரன் என்று மாமா கேலியாக அழைக்கும் கோமளீஸ்வரன் அன்று காலை விடிந்ததும் விடியாததுமாக வந்து சேர்ந்திருந்தான். கப்பலைப்போல, நீளமான ஒரு பெரிய காரில் தனி ஆளாக வந்து இறங்கியத. னால் அரண்மனை ஊழியர்கள் மருண்டு போய் அவனை உள்ளே விட்டு விடத் தயங்கவில்லை. கோமளிஸ்வரனும் அரண்மனையில் உள்ளவர்களைத் தந்திரமாக அணுகி -ன்ான் : . . . . . . . . . . -

"சென்னையிலிருந்து சினிமா டைரக்டர் கோமளிஸ் வரன்.சந்திக்க வந்திருக்கிறார்' என்று சொல்லி அனுப்பி னால் தனசேகரன் எங்கே சத்திக்க மறுத்து விடுவானோ,

என்று பயந்து, 'மெட்ராஸ்லே இருந்து பெரியராஜாவின் பழைய நண்பர் ஒருத்தர் தேடி வந்திருக்கார்னு சொல் லுங்க' என்பதாகத்தான் உள்ளே தனசேகரனுக்குத் தகவல் சொல்லி அனுப்பினான் அவன். تی... .. و . . . .

"மாமாவும் காரியஸ்தரும் ஊரில் இல்லை. பரிமேய்ந்த நல்லூர் போயிருக்கிறார்கள்' என்பதை வந்தவுடன் விசா ரித்துத் தெரிந்து கொண்டிருந்த கோமளிஸ்வரன், அபார மான துணிச்சலை அடைத்திருந்தான், பெரியகாரில். வந்திறங்குகிறவர்கள் பெரிய மனிதர்களாகத் தான் இருக்க வேண்டும் என்கிற பாமர எண்ணம் அரண்மனை ஆட் களுக்கு இருந்ததால் அவர்கள் சில உள் விஷயங்களை, மிகவும் நம்பிக்கையோடும் மதிப்போடும் கோமளிஸ்வர னிடம் சொல்லியிருந்தார்கள். . . . . . . . தடிகை ஜெயநளினியிடம் சொல்லிப் பீமநாதபுரம் அரச குடும்பத்து வாரிசான தனசேகரனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பிவிட்டு அவனை நேரில் பார்த்துப் பேரம், பேசவும் வந்திருந்தான் கோமளிஸ்வரன். வக்கீல் நோட்டீஸ்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/197&oldid=553171" இலிருந்து மீள்விக்கப்பட்டது