பக்கம்:கற்சுவர்கள்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

置9莎 கற்சுவர்கள்

அனுப்பச் செய்ததுமே தனசேகரன் மிரண்டுபோய் ராசி பேசுவதற்கு வந்து தாங்கள் கேட்கிற பணத்தைக் கொடுத்து. விட்டுப் போய் விடுவான் என்று கோமளிஸ்வரன் எதிர் பார்த்ததற்கு மாறாக அரண்மனைத் தரப்பில் பதில்வக்கில். ஏற்பாடு செய்யப்பட்டு வழக்கை எதிர்கொண்டது. அவனுக்கு அதிர்ச்சியாக இருந்தது. எனவேதான் மறு:படி. யும் நேரில் வந்து நயமாகவும் பயமாகவும் பேசி எதை. யாவது பணம்பறிக்கலாம் என்று நினைத்திருந்தான் அவன், உண்மையில் தேடி வந்திருப்பது அவன்தான் என்று தெரிந்: திருந்தால் தனசேகரன் அவனைச் சந்தித்திருக்கவே மாட், டான். சாமர்த்தியமாக உள்ளே நுழைந்து தனசேகர னுக்குப் பெரிய கும்பிடாக ஒரு கும்பிடு போட்டான் கோமளிஸ்வரன். . - -

"அட.ே நீங்கதானா? வேறே யாரோன்னில்லே. நினைச்சேன்' என்று தனசேகரன் சுவாரஸ்யமற்றுப்போன குரலில்:சொன்னான். ; : ... ?" . . . . . . - . ।

"சின்னராஜாவை எப்படியாவது தனியாகப் பார்க் கணும்னு மெட்ராஸ்லேருந்து கார்லியே புறப்பட்டு வந்தி: ருக்கேனுங்க. நான் ஆசைப்பட்டாப்லியே உங்க தரிசனம் கிடிைச்சிரிச்சு. ரொம்ப சந்தோஷம். எப்பவும் போல இந்த அரண்மனையோட-கிருபை எங்களுக்கு இருக்கணும். நாங்கள்ளாம். இந்த அரண்மனை உப்பைத் தின்னு வளர்ந்த, வங்க, சின்னராஜாகிட்டத் தனியா இதைச் சொல்லி விட்டுப் போகணும்னுதான் வந்தேன்.' . . ."

"அப்படியா இதுக்காகவா இத்தனை சிரமப்பட்டு இவ்வளவு தூரம் வந்தீங்க? இப்போ இனிமேல் இங்கே அரண்மனையும் கிடையாது. ராஜாவும் இல்லே. உங்க விசுவாசத்துக்கும் அவசியம் இல்லே, அதுக்கப்புறம் சொத் திலே. உரிமை கோரி வக்கீல். நோட்டிஸ் விடவேண்டிய அவசியமும் இருக்காது" என்று தனசேகரன் பதில் சொல்லி, யதும் அவன் இன்னும் கோபமாகத்தான் இருக்கிறான். என்பது கோமளிஸ்வரனுக்குப்புரிந்தது. ... '

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/198&oldid=553173" இலிருந்து மீள்விக்கப்பட்டது