பக்கம்:கற்சுவர்கள்.pdf/199

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 1 97

'உங்க கோபத்துக்குக் காரணம் இப்போ புரியுது சின்னராஜா ஜெயநளினி யாரோ தூண்டிவிட்டு நோட் டீஸை அனுப்பிவிட்டு அப்புறம் தவியாக்கெடந்து தவிக்குது. மனசு கேட்கலே, சின்னராஜா அத்தனை தங்கமான மனசு உள்ளவரு. அவருக்கா நோட்டீஸ் அனுப்பினோம்னு வேதனைப்படுது. அது விஷயமாகத்தான் நானே இப்போ இங்கே புறப்பட்டு வந்தேன். به

வக்கில் தோட்டீஸ் அனுப்பினப்புறம் எதுக்காக வேதனைப்படனும்? எல்லாம் கோர்ட்டிலே வந்து பார்த் துக்க வேண்டியதுதானே?

"அப்படிச் சொல்லிடப்படாது. தயவு பண்ணிச் சின்னராஜா கொஞ்சம் காது கொடுத்துக் கேட்கணும். நளினிக்குக் குழந்தை மாதிரி மனசு. அது உங்க மேலேயும் ராஜா குடுமபத்து மேலேயும் கொள்ளைப்பிரியம் வச்சிருக்கு." -

"இங்கே யாரும் யாரோட பிசியத்துக்காகவும் தவிச்சுக் கிடக்கலே. இந்த மாதிரிப் பிரியங்களுக்கு எல்லாம் விலை கொடுக்கிற வசதியும் இப்போ எங்களுக்கு இல்லே.

'சின்னராஜா இப்படி எடுத்தெறிஞ்சுப் பேசிடப் படாது. ராஜா குடும்பத்தார் ஜெயநளினி மேலேயும் ஜெய நளினி ராஜா குடும்பத்தார் மேலேயும் எவ்வளவு பிரியமா இருந்திருக்காங்கன்னு இந்த ஆல்பத்தைப் பார்த்தீங் கன்னாத் தெரியும். பெரிய மகாராஜா இந்த ஜெயநளினி மேலே உயிரையே வச்சிருந்தாங்க' என்று சொல்லிக் கொண்டே ஒரு பெரிய ஆல்பத்தை எடுத்து நீட்டினான் கோமளிஸ்ல்ரன். - - -

தனசேகரன் முதலில் அதை வாங்குவதற்கே தயங்கி னான். அப்பு:தம் வழக்குக்குத் தேவையான எதுவும் அதில் இருக்குமோ என்ற யோசனை வரவே வேண்டா வெறுப்பாக அதை வாங்கினான். . - -

3 i مس يم

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/199&oldid=553174" இலிருந்து மீள்விக்கப்பட்டது