பக்கம்:கற்சுவர்கள்.pdf/20

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I 8 கற்சுவர்கள்

ருந்தாலோ உள்ளே இருந்தவர்களாலேயே தொடர்ந்தும் திட்டமிட்டும் நடத்தப்பட்ட சில்லறைத் திருட்டுக்களால் பொருள்கள் ஒவ்வொன்றாகப் பறிபோய்விடும் போலி ருந்தது.

அரண்மனைக்குள்ளே இருந்த ராஜகுடும்பத்தினரிட மும், அந்தரங்க விசுவாச ஊழியர்களிடமும் இதைப்பற்றிக் கூப்பிட்டுப் பேசவும் முடியாமல் விசாரிக்கவும் முடியாமல் பெரியகருப்பன் சேர்வையின் தாட்சண்ய சுபாவம் வேறு அவரைத் தடுத்தது. *

வேறு எந்த நாளிலும் எந்தச் சமயத்திலும் திருட்டுப் போனதைவிடப் பெரிய மகாராஜா இறந்த சிலமணி நேரங் களில் காரியஸ்தர் உஷாராவதற்குள்ளே பல திருட்டுக்கள் அரண்மனையின் பல பகுதிகளில் நடந்துவிட்டன. இதைத் தடுக்கப் போலீஸ் வருவதைத் தவிர வேறு வழியில்லை என்ற நிலைமை ஏற்பட்ட பின்னரே போலீஸாரை உள்ளே கூப்பிட்டு அவர்கள் உதவியினால் முக்கிய அறைகளைப் பூட்டி சீல் வைக்க நேர்ந்தது.

தனசேகரனும், அவன் மாமாவும் வந்து சேர்ந்து இறந்த மகாராஜாவின் காரியங்கள் எல்லாம் முடிந்ததும் இந்தா! உன் சொத்து. இனிமேல் இவற்றை நீதான் கவனித்துக் கொள்ள வேண்டும். எனக்கு வயசாச்சு, என் னாலே முடியலை தவிரவும் ராஜமானியமும் நின்னு போனப்புறம் அரண்மனைச் செலவுகள் மிகவும் சிரம pவ னமாகப் போச்சு. காரியஸ்தன்னு என்னை மாதிரி ஒருத்' தருக்கு மாதச்சம்பளம் கொடுக்கிறது இன்னிக்கி இந்த அரண்மனை கஜானா இருக்கிற சிரமதசையிலே இனிமே சாத்தியமில்லே. நான் விலகிக் கொள்கிறேன்" என்று கெளரவமாகச் சொல்லிவிட்டே விலகி கொள்ளலாம் என்று நினைத்தார் பெரியகருப்பன் சேர்வை. மகாராஜாவின் .உயில் விவரம் எல்லாம் வேறு ஏற்கெனவே ஒரு வருஷத்துக்கு முன்னால் அவருக்கு முதல் "ஹார்ட் அட்டாக்' வந்தபோது எழுதினவை. சீல் செய்யப்பட்ட உறைகளில் பெரிய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/20&oldid=552993" இலிருந்து மீள்விக்கப்பட்டது