பக்கம்:கற்சுவர்கள்.pdf/202

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

200 கற்சுவர்கள்

விடலாம். வீண் மனஸ்தாபம் வேண்டியதில்லே' என்று ஆரம்பித்தான் கோமளிஸ்வரன்.

"யாருக்கு யார் என்ன கொடுப்பதற்கு இருக்கிறது? நீரு உம்ம வேலையைப் பார்த்திட்டுப் போய்ச் சேரும். எதை எப்படிச் சமாளிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்' என்று தனசேகரன் கடுமையாகப் பதில் கூறிய பின்னும் கோடிளிஸ்வரன் போகவில்லை. சொல்லத் தொடங்கி னான்:- - - - 'நீங்க அப்படிச் சொல்லிடப்படாது. பனமா பெரிசு? அவங்களுக்கும் உங்களுக்கும் சிநேகிதம் நீடிக்கணும். நீங்க ரெண்டு பேரும் சந்தோஷமா இருக்கிறதை எங்கண்ணாலே பார்க்கணும்.'

'அடச்சீ! போய்யா...அசிங்கம் பிடிச்சாப் ைஉளறிக் கிட்டிருக்கே. பாரிட்ட என்ன பேசறதுன்னே மரியாதை இல்லாமப் போயிரிச்சு' என்று தனசேகரன் இரைந்தபோது கோமளிஸ்வரனை அந்த வினாடி வரை அழைத்துக்கொண் டிருந்த பன்மை மரியாதிைகூட நழுவி விட்டது. 'தயவு பண்ணுங்க' என்று மறுபடி கோமளிஸ்வரன் குழைந்த போது 'ஒரு தயவும் இல்லே! நீ பார்க்க வேண்டியதைக் கோர்ட்டிலே பார்த்துக்க' என்று கூறிவிட்டு ஆல்பத்தை அவன் மேல் வீசி எறிந்தான் தனசேகரன். அந்த அவமானத் தையும் தாங்கிக் கொண்டு மேலே ஏதோ சொல்ல முயன்றான் கோமளிஸ்வரன், ஆனால் தனசேகரன் அதற்குள் எழுந்து போய் விட்டான். வேறு வழி இல்லாத காரணத்தால் ஆல்பத்தை எடுத்துக் கொண்டு ஊர் திரும்பி னான் கோமளிஸ்வரன்.

18 ,, . . . ‘எரிகிற விட்டில் பிடுங்கியது லாபம் -என்ற பாணி. யில் கோமளிஸ்வரனும், அவனைச் சேர்ந்தவர்களும் நடந்து

கொண்டதைத் தனசேகரன் வெறுத்தான், இதற்கு முந்திய சந்தர்ப்பங்களில் கோமளிஸ்வரனோ, ஜெயநளினியோ

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/202&oldid=553177" இலிருந்து மீள்விக்கப்பட்டது