பக்கம்:கற்சுவர்கள்.pdf/206

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 கற்சுவர்கள்

அந்த வார இறுதியில் சுவர்கள் அறவே நீக்கப்பட்டு ஊரின் எந்தப் பகுதியிலிருந்து பார்த்தாலும் அரண்மனை தெரிந்தது. கோவில்களை விட்டு விட்டுச் சுவர்கள் முற்றிலும் இடிக்கப்பட்டு விட்டிருந்தன. பழையது எதுவும் அழிக்கப் படக்கூடாது என்ற ஊர்ப் பொதுமக்களில் சிலர்,

"ஊரில் ஏற்கெனவே காலந்தப்பாமல் பெய்த மழை கொஞ்ச காலமாக நின்னு போயிருக்கு. இந்தப் புராதன மான கோட்டைச் சுவரை வேறே இப்போ இடிச்சிட் டாங்க. என்ன ஆகப்போகுதோ? இதெல்லாம் நல்லதுக் கில்ல்ே' என்று பேசிக்கொள்ளத் தொடங்கினார்கள்.

'அரண்மனைக் கோட்டைச் சுவரை இடிச்சு இப்போ என்ன பெரிய காரியத்தைச் சாதிச்சாகனும்? வேலை மெனக்கெட்டு இதைப்போய் இடிப்பாங்களோ?'

என்றும் சிலர் பேசிக்கொண்டார்கள். "ஊரே அருள் இல்லாமப் போச்சு. எத்தனையோ காலமாக ஊருக்கு லட்சணமா இருந்த மதிற்கவரைப் போயா இடிக்கனும்?" - - - கண்காண இருந்த ஒன்றை இழப்பதில் மக்களுக்குள்ள பிரமைதளும் மூடநம்பிக்கைகளுமே இந்தப் பேச்சில் வெளிப் பட்டன. மதிலோரத்தில் வெளியே தெருப் பக்கமாகப் பூக்கடைகள், பழக்கடைகள் வைத்திருந்தவர்கள் எல்லாம் சேர்ந்து மதிற் சுவரை இடிப்பதை எதிர்த்துக் கேஸ் போட்டு: "ஸ்டே’ கேட்டு ஏற்கெனவே கோர்ட் அதைத் தள்ளுபடி செய்திருந்தது. மதில்களை இடிப்பதால் தங்களுக்கு ஏற் படக் கூடிய வியாபார நஷ்டத்தை மட்டுமே மனத்திற் கொண்டு அவர்கள் கோர்ட்டுக்குப் போயிருந்தார்கள். அது பலிக்கவில்லை என்றானதும் அவர்களுக்கு ஏமாற்றம்தான் மிஞ்சியிருந்தது. மனத்திற் கறுவிக் கொண்டிருந்தனர்.

சினிமா நடிகை ஜெயநளினி காலஞ்சென்ற பெரிய ராஜாவின் விதவை தானே என்று சொல்லித் தனசேகரன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/206&oldid=553181" இலிருந்து மீள்விக்கப்பட்டது