பக்கம்:கற்சுவர்கள்.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா பார்த்தசார தி 305

மேல் தொடுத்திருந்த வழக்கு விசாரணைக்கு வந்த தினத் தன்று தனசேகரனும் மாமாவும் சென்னைக்குப் போயிருந் தனர், சென்னையில் வழக்கு வேலையாகவும் வேறுசில காரியங்களுக்காகவும் இரண்டு மூன்று நாட்கள் அவர்கள் தங்க நேரிட்டது. அந்த இரண்டு மூன்று நாட்களில் தந்தை உயிரோடிருந்த காலத்தில் அவர் உறுப்பினராக இருந்த "ஜாவி ஜில் கிளப் போன்ற நவநாகரிக கிளப்'களின் பழைய பாக்கிகளை எல்லாம் தீர்த்து உறுப்பினர் பதவியை யும் வேண்டாம் என்று எழுதிக் கொடுத்தான் தனசேகரன். உறுப்பினர் பதவியை விட்டு நீங்காமல் தந்தையை அடுத்து அவருடைய வாரிசாகத் தனசேகரன் தொடர வேண்டும் என்று அந்தந்த கிளப்புகளின் முக்கியஸ்தர்கள் எல்லாரும் டெலிபோன் மூலமும் நேரிலும் வந்து வற்புறுத்தி

னார்கள். -

'நீங்க மெம்பரா இருக்கிறது எங்களுக்கெல்லாம் ஒரு பிரெஸ்டிஜ் பீமநாதபுரம் பிரின்ஸ் எங்க கிளப்பிலே மெம்பர்’னு சொல்லிக்கொள்கிற வாய்ப்பாவது எங்களுக்கு இருக்கனும்,' .

'தயவு செய்து நீங்கள்ளாம் என்னை மன்னிக்கணும். பீமநாதபுரம் இப்போ சமஸ்தானமும் இல்லே. நான் அதுக்குப் பிரின்ஸும் இல்லே. இந்த மாதிரி கிளப் மெம்பர் விப் புக்குச் செலவழிக்கிற அத்தனை பணவசதியும் எனக்கு இல்லை. நானே என் குடும்பத்தையும் என்னையும் காப்பாற்றிக் கொள்ள வேண்டியதற்கே இனிமேல் உழைத்துத்தான் சம்பாதிக்க வேண்டும்’ என்று திடமாக வும் தீர்மானமாகவும் அவர்களுக்கு மறுமொழி கூறி அனுப் பினான் தனசேகரன். " . . . . - மாமா கூட எவ்வளவோ சொல்லிப் பார்த்தார். "பணத்துக்கென்னப்பா பஞ்சம்? இந்த சமஸ்தானத்தை நம்பியா நாம் இருக்கோம். சோஷல் லைப்லே ஒரு பிடிப் புக்கு இதெல்லாம் தேவைப்படும். ரெண்டொரு கிளப் மெம்பர்ஷிப்பையாவது தொடர்ந்து வச்சுக்கிறதுதான்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/207&oldid=553183" இலிருந்து மீள்விக்கப்பட்டது