பக்கம்:கற்சுவர்கள்.pdf/208

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

206 கற்சுவர்கள்

நல்லது. நாளைக்கே கல்யாணம் முடிஞ்சதும் நீ இங்கேயே இந்தியாவிலே தொழில் தொடங்கி நடத்தறேன்னு வச்சுக். குவோம். உன்னைத் தேடி ஒரு வெளிநாட்டு விருந்தாளி வரான்னு வச்சுகிட்டா அவனைக் கூட்டிக்கிட்டுப் போய் ஒரு பார்ட்டி கீர்ட்டி குடுக்கறதுக்காவது ஒரு கிளப். வேணுமே?” - - -

'அதெல்லாம் பார்த்துக்கலாம் மாமா! அப்படி வந்தா ஆலும் இப்போது இதெல்லாம் ஒண்னும் அவசியமில்லே'. என்று மறுத்துவிட்டான் அவன். அடுத்து அவன் செய்த முக்கியமான காரியம் தந்தை பைத்தியக்காரத்தனமாக ஏற்பாடு செய்து ஏராளமாகப் பணத்தைக் கோட்டை விட்டுக் கொண்டிருந்த பீமநாதா புரொடக்ஷன்ஸ்’ என்னும் சினிமாக் கம்பெனியைக் கலைத்துக் கணக்குத் தீர்த்து மூடியது ஆகும். -

ஒரு படமும் உருப்படியாக வெளிவராமல் வருஷா வருஷம் நஷ்டக்கணக்கில் ஏராளமானப் பணத்தை வீணடித் திருந்தது அந்த சினிமாக் கம்பெனி. ஈவு, இரக்கம், பற்று, பாசம், உறவு எல்லாமே இல்லாதபடி தன் தந்தை இன்னும் சிறிதுகாலம் உயிரோடிருந்திருந்தால் நிறைய சீரழிவுகளைச் செய்திருப்பார் என்று தனசேகரனுக்குத் தோன்றியது. குடும்பத்திற்கு நாணயமாகவோ பீமநாதபுரம் என்ற புகழ், பெற்ற வம்சத்திற்கு நாணயமாகவோ மனசாட்சிக்கு நாணயமாகவோ அவர் வாழவில்லை என்பது முற்றாகத் தெரிந்தபோது தனசேகரனால் அதை எந்த விதத்திலும் பொறுத்துக் கொள்ளவோ சமாதானப்படுத்திக் கொள் ளவோ முடியவில்லை, ஒரு புகழ்பெற்ற வம்சத்தின் பழைய இறந்த காலச் செல்வாக்கையும் நிகழ்கால வருமானத்தை யும் எதிர்கால நற்பெயரையும் அவர் முடிந்த வரையிலே விரயமாக்கித் தொலைத்துக் கெடுத்துவிட்டுப் போயிருப்ப தாகத் தோன்றியது. இப்படி பெரிய விர யங் க ள் தொடர்ந்து தேசம் முழுவதும் நிகழாமல் தக்க சமயத்தில் மன்னர்கள் மானிய ஒழிப்பு என்ற சட்டத்தின் மூலமாக

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/208&oldid=553184" இலிருந்து மீள்விக்கப்பட்டது