பக்கம்:கற்சுவர்கள்.pdf/213

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 21.1

யாக டைரக்டர் என்ற பேரிலே சுற்றிக் கொண்டிருக்கும் கோமளிசுவரனையும் பார்த்ததுமே தான் நினைத்துக் கொண்டு வந்தது சரிதான் என்று தனசேகரனுக்குத் தோன்றி விட்டது. தன் தந்தைக்குச் சினிமா உலகத்தின் சம்பந்தத்தை ஏற்படுத்திக் கொடுத்ததே சேதுராசன் சேர்வையாகத்தான் இருக்க வேண்டும் என்றுகூட உள்ளுற அவனுக்கு ஒரு சந்தேகம் இருந்தது. அதனால்தான் வந்தது முதற்கொண்டே அந்த விருந்தில் முழு மனநிறைவோடு அவனால் அமர்ந்திருக்க முடியவில்வை.

ஆனால் மாமாவுக்கோ நேரம் ஆக ஆகத்தான் அது புரிந்தது. ஜெயநளினியையும் தன்னையும் பக்கத்தில் பக்கத்தில் உட்கார வைத்து சேதுராசன் சேர்வை மெல்ல மெல்ல எதற்கு முயலுகிறார் என்று தெரிந்ததும் அவரும் ஆத்திரப் படத் தொடங்கி இருந்தார். விருந்து முடிந்ததும் சேதுராசன் சேர்வை தங்களைத் தனியே கூப்பிட்டபோது தனசேகரன் ம்ாமாவை உறுத்துப் பார்த்தான். அநாவசிய மாகத் தனசேகரன் தன்மேல் எதற்குக் கோபப்படுகிறான் என்று மாமாவுக்கே முதலில் புரியவில்லை. தனசேகர னுக்கோ மாமா ஜெயநளினியிடம் கலகலப்பாகச் சிரித்துப் பேசியதே பிடிக்கவில்லை. சேதுராசன் சேர்வைக்குத்தான் இதே தொழில். மாமாவுக்கு என்ன கேடு வந்தது. அவர் ஏன் சிரித்துப் பேசி நேரத்தைக் கடத்துகிறார்? இவளிடம் அவருக்கு என்ன பேச்சு வேண்டிக் கிடக்கிறது?’ என்று உள்ளுற மனம் .ெ கா தி த் து க் கொண்டிருந்தான்

தனசேகரன். - -

"தனி என்ன தனி? இப்போ இங்கே வேறே யாரு இருக் காங்க? நாம நாலு பேர் மட்டும்தானே இருக்கோம்? என்ன சொல்லணுமோ அதை இங்கேதான் சொல்லுங்களேன். எங்களுக்கும் நேரமாச்சு. போகணும், நாங்க மெட்ராஸ்லே இருக்கறதுக்குள்ள இன்னும் பார்க்க வேண்டிய காரியம் திறைய இருக்கு' என்று மாமாவே சேதுராசன்சேர்வை யைத் துரிதப்படுத்தினார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/213&oldid=553189" இலிருந்து மீள்விக்கப்பட்டது