பக்கம்:கற்சுவர்கள்.pdf/219

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 217

தாச்சு, மலேயாவிலேருந்து, எல்லாரும் இந்த வாரக் கடைசிக்குள்ளே வந்திடுவாங்க...' - * - -

"எப்படி அதெல்லாம். உடனே முடியும்? கொஞ்சம் பொறுத்துச் செய்யலாமே மாமா? இப்போ என்ன அவசரம்? எங்கே ஒடிப்போறோம்? பரஸ்பரம் ஒருத்தருக் கொருத்தர் சத்தியம் பண்ணிக் கொடுத்த கல்யாணம் தானே? நீங்களும் நானுமா முடிவு பண்ணினோம்? எங்கம்மாவே முடிவு பண்ணிக்கிட்டுப் போன கல்யாணம் தானே மாமா இது?" * . . .

"வாஸ்தவும்தான்! ஆனா அதை நிறைவேற்றவும் இதுதான் காலம். மறுபடி மலேயாவுக்கு விமானம் ஏறித் திரும்பறப்போ நீ என் மருமகனாகவும் நான் உன் தாய்வழி மாமனாகவும் திரும்பறதைவிட மாப்பிள்ளையாகவும் மாம னாராகவுமே திரும்பற துன்னு நான் முடிவு பண்ணியாச்சு' என்றார் மாமா.

தனசேகரன் நாணினாற் போலச் சிறிது நேரம் தலை குனிந்து சும்மா இருந்தான். மாமா புன்னகை பூத்தார்.

'எனக்குப் பயமாக்வேயிருக்குத் தம்பி! எங்கே பார்த் தாலும் சினிமா நட்சத்திரங்கள் வாடகை மனைவிமார் களாகவும் தற்காலிக மனைவிமார்களாகவும் ரொம்ப மலி வாகக் கிடைக்கிறாங்க. இந்தச் சூழ்நிலையிலே வயசுவந்த எந்த ஆம்பிளையையும் தனியா விடமுடியலே.

'எங்கப்பாவெப் பத்தித்தான் நீங்க இப்படி எல்லாம். பயப்படனும் மாமா என்னைப்பத்திப் பயப்பட வேண் டாம்! நான் அத்தனை சுலபமாக ஏமாந்துட மாட்டேன்!' - . . . .

சேதுராசன் சேர்வை எனக்கே தற்காலிக மனைவி ஏற்பாடு பண்றேன்னு வலைவிரிக்கிறானே? அரச பரம்பரையான உன்னை விட்டு விடுவானா தம்பி

"நான் ஏமாந்தால்தானே அவரு விலை விரிக்க முடியும்? அரசன், அரச பரம்பரை, இளவரசர் அதெல்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/219&oldid=553195" இலிருந்து மீள்விக்கப்பட்டது