பக்கம்:கற்சுவர்கள்.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

感莎 கற்சுவர்கள்

தயங்கித் தயங்கி, பாக்கி ரொம்ப நிற்குதுங்க. ஏதாவது: கொஞ்சமாச்சும் கொடுத்தால்தான் மேற்கொண்டு கடன் தரலாம் என்று கேட்கக்கூட ஆரம்பித்து விட்டார்கள்.

பீமநாதபுரம் மகாராஜா மாரடைப்பால் காலமான மறுதினம் பகலில் சென்னை விமான நிலையத்துக்குக் கார் அனுப்பி விட்டு அரண்மனை அலுவலகத்தில் அமர்ந்திருந்த போது பெரிய கருப்பன் சேர்வை இந்தப் பிரச்னைகளை எல்லாம் மாற்றி மாற்றி நினைவு கூர்ந்தார். மகாராஜாவின் முறையான வாரிகம் ஒரே புதல் வருமான தனசேகரன் இவற்றை எல்லாம் எப்படிச் சமாளிக்கப் போகிறானோ என்று அவருக்குக் கவலையாக இருந்தது; கவலையில்லாமல் தாய்மாமனுடைய அரவணைப்பில் ஈபோவில் இருந்த அவன் இனிமேல் இங்கு வந்து படவேண்டிய கவலைகளை எண்ணி அவன் மேல் பெரிய கருப்பன் சேர்வைக்கு அனுதாபம் கூட ஏற்பட்டது.

பிணத்துக்குப் பின்னாலே மயானம் வரை காசு வாரி இறைக்கணும். அது இந்த சமஸ்தானத்தில் வழக்கம். மூணு தலைமுறைக்கு முன்னே இவரோட அப்பாவுக்கு அப்பா காலமானப்போ நாலு ராஜ வீதியிலேயும் பொற் காசுகளை வாரி எறைச்சாங்களாம். இப்போ அது முடியாட்டியும் ரெண்டு நயா பைசா ஒரு நயா பைசாவாவது மாற்றி இறைச்சாகனும்-' என்று காரியஸ்தரை உள்ளே கூப்பிட்டுத் தகவல் சொன்னாள் அங்கிருந்தவர்களில் சற்றே. வயது மூத்த ஒர் இளையராணி. -

"ராத்திரி இளையராஜா தனசேகரனும் அவங்க மாமா வும் வந்துடறாங்க. எல்லாத்தையும் அவங்கள் ளாம். வந்தப்புறம் அவங்ககிட்டவே சொல்லுங்க, அவங்க இஷ்டப் படி எது தோதோ அதைச் செய்யட்டும்' என்றார் காரியஸ்தர். - - - - .

அந்த அரண்மனை முகப்பில் மக்ாராஜாவின் பிரேதத்தை மட்டும் மக்களின் பார்வைக்காக வைத்திருந்: தார்கள். ஆனால் பார்வைக்குத் தெரியாமல் அரண்மனை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/22&oldid=552995" இலிருந்து மீள்விக்கப்பட்டது