பக்கம்:கற்சுவர்கள்.pdf/220

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 கற்சுவர்கள்

லாம் இருந்தால் தான் பீடைமாதிரி இந்த விஷயங்களெல் லாம் நம்மை வந்து பீடிக்குமென்று பயந்துதானே அதிலே இருந்து தனியா விலகியிருக்கேன்! என்னை எந்தக் கெடு. தலும் அணுக முடியாது மாமா..." - *

"சரி தம்பீ! அதெல்லாம் புரியுது. உன்னைப் பாராட்ட றேன். உங்கப்பாவுக்கு என் சகோதரியைக் கொடுத்தேன். அவரு ஒழுங்கா நடத்துக்கலே! அவளும் பாதியிலே செத்துப் போயிட்டா! அடுத்த தலைமுறையிலே நீ நல்லா இருக்கே. உன்னை யாருமே கெடுத்திட முடியாது. உனக்கு என் மகளைக் கொடுக்கிறேன். அதிலே தாமதம் எதுக்கு உடனே அடுத்த முகூர்த்தத்திலே கலியானம் நடக்கணும். கிறது என் ஆசை. நீ என்ன சொல்றே?’’

'சன் உங்க இஷ்டம் போலச் செய்யுங்க மாமா ஆனா...' -

"ஆனால் என்ன? அதையும் முழுக்கச் சொல்லு.'

"ஒண்ணுமில்லே! என் கல்யாணம் எளிமையா நடக்க கணும். சமஸ்தானத்து ஜபர்தஸ்தெல்லாம் அதிலே கூடாது. உங்க பணச் செழிப்பையும் அதிலே காட்டக்கூடாது. என் குடும்ப அந்தஸ்துங்கிற பேரிலேயும் டாம்பீகச் செலவு கூடாது. உங்க குடும்ப அந்தஸ்து என்கிற பேரிலேயும் டாம்பீகம் கூடாது." -

"நீ இப்படி நிபந்தனை போடுவேன்னு எனக்கு முன் கூட்டியே தெரியும். அதனாலேதான் நானே பரிமேய்ந்த: நல்லூர்க் கோவிலிலே எளிமையான கல்யாணம்னு ஏற்பாடு: பண்ணியிருக்கேன்." - o,

'ரொம்ப சரி. கல்யாணச் செலவை மிச்சப்படுத்தில் நான் இரண்டு லட்சம், நீங்க ரெண்டு லட்சம் பணம் போட்டுப் பீமநாதபுரத்திலே ஒரு பெண்கள் கல்லூரி ஏற்படுத்தணும். நீங்க சம்மதிச்சா இது சுலபமா நடக்கும். மாமா! பீமநாதபுரம் வட்டாரத்திலே பெண்கள் கல்லூரியே கிடையாது. வயசு வந்த பெண்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/220&oldid=553196" இலிருந்து மீள்விக்கப்பட்டது