பக்கம்:கற்சுவர்கள்.pdf/221

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி - 2 19

அனாவசியமா நூறு மைல், இருநூறு மைல் தள்ளியிருக்கிற, நகரங்களிலே தனியாய் போய்ப் படிக்க வேண்டியிருக்கு. எங்கம்மா பேரிலே அந்த காலேஜைத் தொடங்குவோம்!"

"ஒ எஸ். கண்டிப்பாகச் செய்யலாம் தம்பீ! இதெல் லாம் எங்கிட்ட நிபந்தனை போட்டுத்தான் உனக்கு நான் செய்யனுமா? என் பெண்ணைக் கட்டிக்கிட்ட்ா இந்தச் சொத்தெல்லாம் உன் நிர்வாகத்தின் கீழேத்ானே வரப் போகுது?’’ х r

காலேஜ் வைப்பதற்கு மாமா சம்மதித்ததும் தன சேகரன் திருமணத்திற்கு முழு மகிழ்ச்சியோடு ஒப்புக்கொண் டான். மாமா திருமணப் பத்திரிகை அச்ச்டிக்க ஏற்பாடு செய்யப் போனார். தனசேகரன் மியூஸியம் திறப்பு விழா வுக்கு ஏற்பாடு செய்யப் போனான். மியூஸியம் திறப்பு விழா அழைப்பிதழும் தனசேகரனுடைய திருமண அழைப் பிதழும் ஒரே சமயத்தில் ஒரே அச்சகத்தில் அச்சாகி முடிந் ததும் அவற்றை எடுத்துக் கொண்டு இருவரும் ஊருக்குப் புறப்பட்டார்கள். • . . . . .

பீமநாதபுரம் ஊரே மாறிவிட்டாற்போல் அந்த மியூசியம் ஊர் நடுவே ஒளிவு மறைவின்றிக் காட்சியளித்தது. கற்சுவர்கள் இல்லாமல் பூங்காக்களோடு கூடிய கம்பீர மான அரண்மனை இப்போது புதுப்பொலிவோடு தோன்றியது.

முகத்திரை நீக்கிய புதுமணப்பெண் போல அரண் மனை அழகுற இலங்கிற்று இப்போது. மியூசியத்திற்கு 2. ரூபாய் நுழைவுக் கட்டணம் வைக்கவேண்டும் என்று மாமா சொன்னார். • ‘. . . . . - -

"ஏழை எளியவர்கள் அவ்வளவு தர முடியாது. இருபத் தைந்து காசுகள் கட்டணமாக நியமித்தால் போதும்' என்று கூறினான். தனசேகரன், - - く மாமா ஒப்புக் கொண்டார். தனசேகரனின் பரந்த மனப்பான்மை அவரை ஆச்சரியப்பட வைத்தது. பீமநாத

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/221&oldid=553197" இலிருந்து மீள்விக்கப்பட்டது