பக்கம்:கற்சுவர்கள்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

228 கற்சுவர்கள்

அதுவரை சமஸ்தானம், அரண்மனை என்ற பெயரில்: ஒரு சிலர் மட்டுமே அடைய முடிந்திருந்த நன்மைகளை இனி எல்லா மக்களும் அடையும்படி தனசேகரன் செய். திருத்த பல மாறுதல்களை ஊர் மக்கள் வரவேற்றனர். மகிழ்ச்சியோடு பேசினார்கள்! தனசேகரனைப் பாராட்டி ைஈர்கள். - - -

அந்த வாரத்தில் பீமநாதபுரம் விழாக்கோலம் பூண்டது. மியூசியத் திறப்பு விழா, தனசேகரன் திருமணம் இரண்டும் பக்கத்துப் பக்கத்து ஊர்களில் நடைபெற இருந்தாலும் இரண்டு ஊர்களிலுமே கலகலப்பும் கோலாகலமும் மிகுந்: திருந்தன. கோலாலம்பூரிலிருந்தும், மலேசியாவின் பிற பகுதிகளிலிருந்தும், மாமா தங்கபாண்டியனின் குடும்பத் தினர், வேண்டியவர்கள், உறவினர்கள், எல்லாரும் வந்திருந்தனர். உள்நாட்டு நண்பர்களும், ஐ.நவீனர்களும் கூட நான்கு தினங்களுக்கு முன்பே பீமநாதபுரம் வந்து சேர்ந்து விட்டனர். ஒரு வயதான மூத்த பெரியவர் மாமாவிடம் திருமண அழைப்பிதழ் அச்சிட்டிருந்த முறை பற்றிக் குறைப்பட்டு விவாதிக்கத் தொடங்கினார்.

பத்திரிகையிலே எந்த இட த் தி லே ய | வ து மாப்பிள்ளை மீமநாதபுரம் அரச குடும்பத்து வாரிசு'ன்னு, குறிப்பிட்டிருக்க வேணாமா? இவ்வளவு தூரம் விவரம் தெரிஞ்ச நீங்க பத்திரிகை அச்சடிச்சப்போ அதை எப்படித். தவறவிட்டீங்கன்னே தெரியலியே?' - - -

"நானாக அதை விடலே, மாப்பிள்ளையே வேண் டாம்னு அபிப்ராயப்பட்டதாலேதான் விட்டேன். என்ன காரணத்தாலேயோ தனசேகரன் அதை எல்லாம் போட றத்துக்குப் பிரியப்படலே பாட்டையா! வேண்டாம்னுட் டான்.' . . . . - - - - -.

அவருதான் சின்னப்புள்ளையாண்டான். வேண்டாம்: னாலும் நீர் விவரத்தெரிஞ்ச மனுஷன் அதை விடலாமோ? குடும்பப் பெருமை, ராஜ வம்சம் இதெல்லாம் எல்லாருக் குமா கிடைச்சுட முடியும்?' என்று விடாமல் தொண தொணத்தார் அந்த முதியவர். - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/224&oldid=553200" இலிருந்து மீள்விக்கப்பட்டது