பக்கம்:கற்சுவர்கள்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 223

இப்படிப் பல முனைகளிலிருந்து பல வினாக்களை மாமா எதிர்கொள்ள வேண்டியிருந்தது. இதையெல்லாம் கேள்விப் பட்டபோது தனசேகரன் சிரித்துக்கொண்டே சொன்னான்: ; : " . . ; .. - -

"நான் இனிமே அரசனும் இல்லை. அரசவம்சமும் இல்லை. சாதாரண மனிதன்தான் னு சொன்னா ஜனங்க கேட்க மாட்டேங்கிறாங்க. நான் அரச வம்சம்தான்னு சொன்னா அதை அரசாங்கமும் சட்டமும் ஒப்புக்கொள்ளத் தயாராயில்லே. இனிமே என்னதான் செய்ய முடியும்னு புரியலே."

இந்த விதமான தனசேகரனின் விளக்கம் கேள்வி கேட்டவர்களைத் திருப்திப்படுத்தவில்லை. ஆனாலும் அவர்களை மேலும் முணுமுணுக்க விடாமல் வாயை அடைக்கப் பயன்பட்டது. ' . . - எளிமையையும். அன்பையும், பண்பையும் கொண்டாடு கிற மனிதனைவிட விண் பெருமைகளையும், டம்பங்களை யும், ஜபர்தஸ்துக்களையும் கொண்டாடுகிற மனிதர்கள் தான் உலகில் அதிகம் இருந்தார்கள். எளிமையும் பண்பும் இலக்கியங்களிலும் எழுத்துக்களிலுமே கொண்டாடப் பட்டன. வாழ்வில் நிலைமை என்னவோ முற்றிலும் வேறாகத்தான் இருந்தது. டாம்பீகமே மதிக்கப்பட்டது. ஜம்பமே பெருமைப்படுத்தப் பட்டது. பெருவாரியான மக்களுக்கு எளிமையின் அருமையைப் புரிந்து கொள்ளும் வாய்ப்பே இன்று இந்நாட்டில் இல்லை என்று தெரிந்தது. மக்களின் இந்த மனநிலை தனசேகரனுக்கு நன்கு விளங்கி யிருந்தது. . . . . .

"ஓர் அரண்மனை ஏலத்துக்கு வருகிறது" என்ற சிறு கதையில் தான் படித்த இளவரசன்கூடத் தன் எளிமைப் பண்பை மக்களுக்குப் புரிய வைக்க மிகவும் சிரமப்பட வேண்டியிருந்தது என்பதை தனசேகரன் நினைவூட்டிக் கொண்டு பார்த்தான். . .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/225&oldid=553201" இலிருந்து மீள்விக்கப்பட்டது