பக்கம்:கற்சுவர்கள்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

224 கற்சுவர்கள்

நான்கு ரத வீதிகளிலும் எட்டுக் குதிரைகள் பூட்டிய

பழமையான அரண்மனைச் சாரட்டில் மணமகனான தன சேகரன் ஊர்வலமாக அழைத்து வரப்பட வேண்டும் என்று

ஆசைப்பட்டார்கள் பீமநாதபுரம் நகரப் பொதுமக்கள்.

தனசேகரனோ அந்தப் புராதனமான சாரட்டையே

மியூசியத்தில் கொண்டு போய் நிறுத்தி வைத்திருந்தான்.

தனசேகரனின் திருமணத்திற்கு இரண்டு நாட்களுக்கு

முன்பாக மூன்று முக்கியமான திறப்பு விழாக்கள் பீமநாத புரம் வட்டாரத்தில் நடைபெற்றன. பீமநாதபுரம் அரண்

மனை மியூசியத் திறப்பு விழா, வடிவுடைய நாச்சியார்

பெண்கள் கல்லூரித் திறப்பு விழா, நீர்ப்பாசன வசதிக்குப்

புதிதாகக் கட்டப்பட்டிருந்த அணைக்கட்டுத் திறப்பு விழா மூன்றும் அடுத்தடுத்து நிகழ்ந்தன. முதலில் கல்லூரிக்காக

அரண்மனைக்குச் சொந்தமான சில ஏக்கர் நிலத்தை மட்டும்

எழுதி வைக்கலாம் என்றெண்ணியிருந்தார்கள் மாமாவும்,

தனசேகரனும். பின்னால் யோசித்த வேளையில் பழைய நவராத்திரி விழாவின்போது பயன்படுத்திய மாளிகைகளும்

கட்டிடங்களும் விருந்தினர் தங்கும் விடுதிகளும் பயனின்றி இருப்பது நினைவுக்கு வந்தது. அந்தக் கட்டிடங்களையும்

-

அவற்றைச் சுற்றி இருக்கும் காலி நிலங்களையும் இப்போது புதிய பெண்கள் கல்லூரிக்கு அப்படியே பயன்படுத்தலாம் என்று தோன்றியது. சில மாறுதல்களோடு அந்தப் பெரிய

கட்டிடங்களை அப்படியே கல்லூரியாக மாற்றினார்கள்.

திறப்பு விழாவுக்கு ஏற்பாடு செய்தார்கள்.

அரண்மனை இடங்களில் வசந்தமண்டபத்து விருந் தினர் மாளிகையையும் அதைச் சுற்றியிருந்த தோட்டத்தை

யும் மட்டுமே தன் குடியிருப்பு உபயோகத்துக்கு என்று

வைத்துக் கொண்டிருந்தான் தனசேகரன். மற்ற எல்லா

இடங்களும் பொதுக் காரியங்களுக்காக அல்லது பொது

உபயோகங்களுக்காக எழுதி வைக்கப்பட்டு விட்டி ருந்தன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/226&oldid=553202" இலிருந்து மீள்விக்கப்பட்டது