பக்கம்:கற்சுவர்கள்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 225

ஒரு பெரிய சமஸ்தானாதிபதி தன் உடைமைகளை எல்லாமே பொதுமக்களுக்குப் பிரித்துக் கொடுத்துவிட்டுத் தன் அளவில் ஒரு சாதாரணக் குடிமகனாகி விட்டது போன்று இந்த மகத்தான மாறுதல் நாடு முழுவதும் பரபரப் பாகப் பேசப்பட்டது; விளம்பரமாயிற்று; பத்திரிகைகள் எல்லாம் தலையங்கங்கள் எழுதின. அகில இந்தியாவில் இருந்தும் ஏராளமான பெரிய பத்திரிகை நிருபர்கள் பீமநாத புரத்தைத் தேடி வந்து முற்றுகையிட்டனர். தனசேகரனின் படமும் பேட்டிகளும் பத்திரிகைகளில் வெளிவரத் தொடங்கியிருந்தன. ராஜமான் ய ஒழிப்புக்குப் பின்னர் மக்களுக்கு முன் உதாரணம் ஆகும் ஓர் இளவரசர் என்ற தலைப்புடன் பல பத்திரிகைகள் தனசேகரனைப் புகழ்ந்து எழுதியிருந்தன. சில பிரிட்டிஷ், அமெரிக்கப் பத்திரிகை களின் நிருபர்கள் கூடப் புகைப்படக் கருவிகளுடனும், டெலிவிஷன், சினிமா, படப்பிடிப்புக்கான சாதனங்களுட னும் பீமநாதபுரத்துக்கு வந்திருந்தனர். பிரதமரும் முக்கியத் தலைவர்களும் தனசேகரனை வாழ்த்தித் தந்திகள் அனுப்பி யிருந்தனர். சரித்திரத்தில் ஒரு மாறுதலை உண்டாக்கும் இந்த நிகழ்ச்சிகளைப் படம் பிடித்து மக்களுக்குக் காட்டு வதற்கு மத்திய, மாநில அரசாங்கங்களின் செய்திப் படப் பிரிவினர் பீமநாதபுரத்தில் வந்து முகாம் இட்டிருந்தனர்.

முறையின்மை, ஒழுக்கக்கேடு, ஊழல், ஆகியவற்றி னால் தன் தந்தை இழந்திருந்த நற்பெயரைத் தனசேகரன் மீட்டான். கெட்ட பெயரைப் போக்க முயன்றான், பழைய ராஜாவின் ஊழல்கள் பீமநாதபுரத்தின் புகழுக்கே களங்கம் உண்டாக்கியிருந்தன. இப்போது தனசேகரன் தன் செய்கை களால் அந்தப் புகழையும், பெயரையும் மீட்டுக்கொண் டிருந்தான். r . - - .

அரண்மனையும் சுற்றியிருந்த அழகிய மிகப் பெரிய பூங்காவும். சிறுவர்க்கான மிருகக்காட்சி சாலையாகவும். மியூசியமாகவும் பொதுமக்கள் உபயோகத்துக்கான பார்க் காகவும் மாற்றப்பட்ட செய்தி அகில இந்தியாவையுமே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/227&oldid=553203" இலிருந்து மீள்விக்கப்பட்டது