பக்கம்:கற்சுவர்கள்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

230 கற்சுவர்கள்

அதில் கண்டிப்பாக இருந்தான். திருமணத்திற்கு மறுநாள் அரண்மனையின் பழைய ஊழியர்களுக்குத் தனியே அவனும் அவன் மனைவியும் விருந்தளித்தனர். விருந்தின் முடிவில் தனசேகரன் அவர்களிடம் விடைபெற்றுக்கொண்டான்.

உங்களுக்கெல்லாம் எங்களது பரம்பரையின் சார்பில் நான் நன்றி சொல்லக் கடமைப்பட்டிருக்கிறேன். இனி இந்த ஊரில் உட்கோட்டை வெளிக்கோட்டை என்று. பெயர்களுக்கு அர்த்தமே இல்லை. எப்போது மதில்கவை: இடித்தாயிற்றோ அப்போதே பேதர்பேதங்கள். போய் விட்டன. மதில்கள் இருந்தவரைதான் உட்கோட்டைவாசி, வெளிக்கோட்டைவாசி என்ற வேறுபாடு இருந்தது. இனி வேறுபாடுகள் இல்லை. ஊரை-அந்தஸ்து, வர்ழ்க்கைத் தரம் எல்லாவற்றாலும் இரண்டாகப் பிரித்துக்கொண்டி ருந்த சுவர்கள் இப்போது தகர்க்கப்பட்டுவிட்டன. அரண். மனை பொது இடமாக மாற்றப்பட்டுவிட்டது. அரச வம்ச உபயோகத்துக்கான இடம், பொதுமக்கள் உபயோகத்துக் கான இடம் என்று ஊரை இரண்டாகப் பிரித்த உயரமான கற்சுவர்களை நீக்கியாயிற்று. இனி ஊர் ஒன்று மனப் பான்மையும் ஒன்று. நான் இங்கிருந்து சமஸ்தானத்தை நடத்தவோ, சமஸ்தானாதிபதி என்ற பெருமை கொண்டா டவோ தயாராயில்லை. இனி எல்லோரையும் போல, நானும் இவ்வூர்க் குடிமக்களில் ஒருவனாக வாழ்வேன். "நாம் அரச குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். நாம் மற்றவர் களைவிட உயர்ந்தவர்கள்’ என்ற மனப்பான்மைதான். உண்மையான பெரிய கற்சுவர். வெளியே இருக்கிற கற். சுவர்கள். கதவுகள், பூட்டுக்கள். அந்தஸ்தைப் பாதுகாக்கும் அடையாளங்கள் எல்லாவற்றையும்விட மனத்துக்குள் இருக்கும் கற்சுவர்களாகிய நினைப்புக்கள்தான் கடுமை. யானவை. என் தந்தையின் மனத்தில், அப்படி ராஜ வம்சம் என்ற கற்சுவர் பெரிய கர்வமாக எழும்பி உலகை மறைத்துக் கொண்டு இருந்தது. என் மனதில், அப்படி எதுவும் இல்லாததால்தான் நான் வெளியே ஊரை இரண் டாக்கிக் கொண்டிருந்த மதிற்கவர்களையும் நீக்கினேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/232&oldid=553209" இலிருந்து மீள்விக்கப்பட்டது