பக்கம்:கற்சுவர்கள்.pdf/234

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

23 2 கற்சுவர்கள்

வந்துவிடுவோம். இங்கே புதிதாகத் தொடங்கியிருக்கும். பெண்கள் கல்லூரியின் வளர்ச்சிக்கென்று பல வேலைகளை செய்ய வேண்டும். எப்படியும் ஒரு வருஷத்துக்குள்ளே திரும்பி வந்துவிடத் திட்டம் போட்டிருக்கிறேன்.'

'வரும்போது நீங்களும் உங்கள் மனைவியும் மட்டும் தனியே வரக்கூடாது.

பின் எப்படி வரவேண்டும்?' "எங்களையெல்லாம் ஏமாற்றி விடாமல் பீமநாதபுரம் அரச குடும்பத்துக்கு வாரிசாக ஒரு மகனையோ. மகளையோ பெற்றுக்கொண்டு வரவேண்டும். இது எங்கள் அன்புக் கட்டளை." - - - -

"'உங்கள் அன்புக்கட்டளைக்கு ஒரு சிறு திருத்தத் துடனே நன்றி. எங்கள் மாமாவுக்கும் மாமிக்கும் ஒரு பேரனோ பேத்தியோ கிடைக்க வேண்டுமே ஒழிய பீமநாத புரத்தை ஆள என்று நாங்கள் எந்த வாரிசும் பெறப்போவ தில்லை. எங்கள் குழந்தை அரச வம்சத்து வாரிசாக இருக் காது. எங்கள் குழந்தையாகவும் எங்கள் பெற்றோர்களின் பேரனாகவோ பேத்தியாகவோ மட்டுமே இருக்கும். இனி பீமநாதபுரத்தில் அரசர், மக்கள் என்ற பிரிவுகள் இல்லை என்பதை நிரூபிக்கும் அடையாள நீக்கமாகத்தான் பழைய கற்சுவர்களை நீக்கினேன். பல நூறு வருஷத்து வரலாற்றை. ஒருவிதமான அடக்குதல் ஆளுகையின் சின்னத்தை தரை மட்டமாக நீர்த்தேக்கம் கட்டுவதற்குக் கற்களை விற்றதன் நோக்கமே அதுதான். பல நூற்றாண்டுகளாக அதிகார வெப்பத்தில் சூடேறிய அந்த மதிற்கற்கள் இனி மேலாவது, காலம் காலமாக நீர்த்தேக்கத்தின் குளிர்ச்சியில் ஆறுதல் பெறட்டும் என்பதுதான் என் ஆசை.

தனசேகரனின் இந்தச் சொற்களைக் கேட்டுக் கூட்டம் கரகோஷம் செய்தது. அந்தக் கரகோஷமும் வாழ்த்தொலி களும் ஒய்வதற்குச் சில வினாடிகள் ஆயின.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/234&oldid=553211" இலிருந்து மீள்விக்கப்பட்டது