பக்கம்:கற்சுவர்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

22 கற்சுவர்கள்

லைப்ரரிக்கோ-அவை மிக அருகிலிருக்கின்றன என்ற காரணத்தால் நடந்துதான் போய்க் கொண்டிருந்தான். மகாராஜா எத்தனையோ முறை நேரில் கூப்பிட்டுத் திட்டி யும், இரைந்து கண்டித்தும். அவன் அதைக் கேட்கவில்லை. நமக்கு ஒரு ஸ்டேட்டஸ் இருக்குடா இன்ன சமஸ் தானத்து யுவராஜா காசில்லாமே லெக்கண்ட் கிளாஸ்ல போறான். தெருவிலே அநாதைப் பயல் மாதிரி நடந்து போறான்'னெல்லாம் நான் உயிரோட இருக்கிறப்பவே உன்னைப் பற்றி என் காதிலே விழப்படாது' என்று தனசேகரனைச் சத்தம் போட்டும் இருக்கிறார். ஆனால் அந்தச் சத்தத்தையும் கூப்பாட்டையும் தனசேகரன் பொருட்படுத்தியதே இல்லை. சமஸ்தான அந்தஸ்துப் போன பிறகும் மகாராஜா செய்த ஆடம்பரங்கள் அவனுக்குப் பிடிக்கவில்லை. குறிப்பாகக் கேட்பார் பேச்சைக் கேட்டுக்கொண்டு தந்தை சினிமா எடுக்கக் கிளம்பியது அவனுக்கு அறவே பிடிக்கவில்லை.

சொல்லிப் பார்த்து அவரை ஒன்றும் திருத்திவிட முடி யாது என்று தோன்றவே தனசேகரன் தன்னளவில் ஒதுங்கி விட முயன்றான். அந்தச் சமயம் பார்த்து மல்ேயாவி லிருந்து ஊர் வந்திருந்த அவனுடைய தாய்வழி மாமன் தன்னோடு அக்கரைச் சீமைக்கு அவனைக் கூப்பிடவே அவனும் மறு பேச்சுப் பேசாமல் அவரோடு புறப்பட்டு விட்டான். . * . . . . . . . . . . . . . . . . . . . ‘. . . . .

அதன் பின்னால் இரண்டாண்டுகள் வரை அவன் ஊர்ப் பக்கமாக எட்டிக் கூடப் பார்க்கவில்லை. இப்போதுதான் தந்தை காலமான பின் முதன் முதலாக ஊர் திரும்பினான்

தனசேகரன். .

இரவு எட்டு மணிக்குச் சென்னையிலிருந்து காரியஸ் தருக்கு ஃபோன் வந்தது. தனசேகரனும் மாமாவும் மீனம் பாக்கம் விமான நிலையத்திலிருந்து காரில் ஊருக்குப் புறப் பட்டுவிட்டதாகத் தகவல் தெரிவித்தார்கள் வேண்டியவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/24&oldid=552997" இலிருந்து மீள்விக்கப்பட்டது