பக்கம்:கற்சுவர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

罗垒 சுற்சுவர்கள்

'வந்துதானே ஆகணும் தம்பீ! உயிரோட இருந்தப்பு. எனக்கும் அவருக்கும் ஒத்துக்காதுன்னாலும் சொந்த மச்சினரு சாவுக்குக் கூட வரலேன்னு நாளைக்கு ஒருத்தன் குறை சொல்ல இடம் வச்சுடப் பிடாது பாரு. ஆயிரம் மனஸ்தாபம் இருக்கலாம். உங்கப்பா கெட்டவராவே இருந்: திருக்கலாம். குடும்பத்துக்குள் வார ஒருத்தருக்கொருத்தர் விட்டுக் கொடுக்கப்படுமா?' என்றார் மாமா தங்க பாண்டியன். அவரும் அவனும் பேச ஆரம்பித்த குடும்ப விஷயங்கள் ஒரு முடிவுக்கு வராமல் அதுமார் வால் மாதிரி நீண்டுகொண்டு போகவே விமானம் அதற்குள் சென்னை மீனம்பாக்கம் நிலையத்தில் தரையிறங்கிவிட்டது.

- தனசேகரனிடமும் சரி, அவனுடைய மாமா தங்க பாண்டியனிடமும் சரி, ஆளுக்கு ஒரு சூட்கேஸ் மட்டுமே லக்சேஜ் என்ற பெயரில் இருந்தன. அதனால் பாஸ்போர்ட் எண்ட்ரி, கஸ்டம்ஸ் செக்கிங் ஆகிய காரியங்கள் மிகச்.

சுருங்கிய நேரத்திலேயே முடிந்துவிட்டன.

அவர்கள் விமான நிலை ய் த் தி ல் சர்வதேசப் பரிசோதனைப் பிரிவிலிருந்து லவுஞ்ஜுக்கு வரும் முதல் வாயிலில் அடி எடுத்து வைத்ததுமே சில உறவினர்களும் பீமநாதபுரத்திலிருந்து காருடன் தயாராக வந்து காத் திருந்த டிரைவரும் அவர்களை எதிர்கொண்டார்கள்.

யாருடனும் நின்று பேச அவர்களுக்கு நேரமில்லை. வந்திருந்த உறவினர்களிடம் சொல்லி உடனே பீமநாத புரத்துக்கு.டெலிஃபோன் மூலம் தாங்கள் சென்னை விமான நிலையத்திலிருந்து ஊருக்குக் காரில் புறப்பட்டு விட்ட தாகத் தகவல் தெரிவிக்கச் சொல்லிவிட்டுப் புறப்பட்டார் ஆள் அவர்கள். கார் செங்கல்பட்டைக் கடக்கும்போது

இரவு மணி எட்டேமுக்கால்.

+. . " 'வசிக்குதா தம்பி ஏதாவ்து சாப்பிடறியா? நாளைக் காலையில்ே பத்துப் பன்னிரண்டுமணிகூட ஆகும். மயானத். திலிருந்து அரண்மனைக்குத் திரும்பற வரைபச்சைத் தண்ணி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/26&oldid=552998" இலிருந்து மீள்விக்கப்பட்டது