பக்கம்:கற்சுவர்கள்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 - கற்சுவர்கள்

காரின் உட்புறமிருத்த விளக்கைப் போட்டுக் கொண்டு. அந்த வெளிச்சத்தில் படிக்க முயன்றார் மாமா. -

தமிழ் மாலைத் தினசரிகளில் எல்லாம் முதல் பக்கத்தி லேயே தலைப்பில் இல்லாவிட்டாலும் சற்று கீழே தள்ளி பீமநாதபுரம் ராஜா மாரடைப்பில் காலமானார்’ என்று. பெரிதாகத் தலைப்புக் கொடுத்துப் படத்துடன் பிரசுரித் திருந்தார்கள். ஆங்கிலத் தினசரியில் மட்டும் அதை மூன்றாம் பக்கத்தில் கீழ்க்கோடியில் மரண அறிவிப்புப் பகுதியில் முதல் அயிட்டமாக வெளியிட்டு இருந்தார்கள்.

தமிழ்ப் பத்திரிகைகளில் அந்தக் கார் வெளிச்சத்தில், படிக்க முடிந்த மாதிரி இருந்த பெரிய எழுத்துச் செய்தி களையும் தவைப்புக்களையும் வாய்விட்டுப் படித்துக் கொண்டிருந்த மாமா, நடிகர்களும் நடிகைகளும் திரைப் பட முக்கியஸ்தர்களும் முதுபெரும் டைரக்டர் கோமளிஸ் வரன் தலைமையில் பீமநாதபுரம் விரைகிறார்கள்’ என்று படித்துவிட்டு அவ்வளவில் அந்தப் பேப்பரைப் படிப்பதை நிறுத்திவிட்டுத் தனசேகரன் பக்கமாகத் திரும்பி, 'தம்பி! இந்தக் கோமளிஸ்வரன் யாரு தெரியுமில்லே? நான் இவன் பேரை வேணும்னே உங்கப்பா கிட்டப் பேசறப்பக்கூடக் கோமாளிஸ்வரன்னுதான் சொல்வேன். இ வ. ன் தா ன் உங்கப்பாவைச் சினிமா லயன்லே கொண்டு போய்க் கவுத்து: விட்ட பயல். இவன் பேக்சைக் கேட்டுக்கிட்டுத்தான் அவரு உங்கம்மா செத்து ஒரு வருஷம் முடியறதுக்குள்ளே அந்த ஜெயநளினி ப்ேருக்கு லட்ச ரூபாயிலே அடையாறிலே வீடு வாங்கி வச்சாரு...இந்த பயலைப் பார்த்தா அரண் மனைத் தோட்டத்திலே ஒரு தென்ன மரத்திலே கட்டி வச்சு உதை உதைன்னு உதைக்கனும், அப்பத்தான் என். கோபம் எல்லாம் ஆறும்' என்றார்.

இவரு, தானா வலுவிலே போயிக் காஞ்ச மாடு: கம்புலே விழுத்த கதையாக் கெட்டுப் போனாருன்னா அதுக்கு அவன் என்ன பண்ணுவான் மாமா? அவனைப் போல இருக்கிறவன் கொடுக்கிறதுக்கு யாராவது பசை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/28&oldid=553000" இலிருந்து மீள்விக்கப்பட்டது