பக்கம்:கற்சுவர்கள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கற்சுவர்கள்

டிரைவர் தங்கள் உரையாடலை எல்லாம் கேட்டுக்கொண்டு. வருகிறான் என்பதை இருவருமே நினைவு வைத்துக் கொண்டுதான் இருந்தார்கள். காலஞ்சென்ற மகாராஜாவை மதித்ததை விட அந்த டிரைவர் தன்னையும் தனசேகரனை யும் அதிகமாக மதிப்பது மாமா தங்கபாண்டியனுக்கு நன்றாகத் தெரியும். கடைசிக் காலங்களில் அவன் மகாராஜாவின் நடத்தைகள் பிடிக்காமல் 'சமஸ்தான வேலைன்னா .ெ க ள ர வ ம் கி ற காலம் மலையேறிப் போச்சுங்க. இவரு கண்ட சினிமாக்காரிங்க வீட்டிலே எல்லாம் போய்க் காத்துக் கிடக்க ஆரம்பிச்சுட்டாருங்க. நானும் உங்ககூட மலேசியாவுக்கே வந்துடறேனுங்க. அங்கே எஸ்டேட்லே ஏதாவது டிரைவர் வேலை போட்டுக் கொடுங்க போதும். மானமாப் பிழைக்கலாம்" என்று தங்க பாண்டியன் ஊர்ப் பக்கம் வந்து திரும்பும் போதெல்லாம் அவரிடம் இந்த டிரைவர் பல முறை கெஞ்சியிருக்கிறான். அதனால் சிறிது நேர உரையாடலுக்குப் பின் இந்த டிரைவரையே தங்கள் பேச்சில் கலந்து கொள்ளச் சொல் கிறார் போன்ற கேள்வி ஒன்றை அவனிடமே கேட்டார் மாமா தங்கப் பாண்டியன். -

என்ன ஆவுடையப்பன்? நாங்க பேசிக்கிற தை. எல்லாம் கேட்டுக்கிட்டுத்தானே வர்ரே? மகாராஜா கால மானப்போ அரண்மனை நெலைமை எப்படி? கஜானா நிலைமை எப்படி? காரியஸ்தர் சே ர் ைவ என்ன சொல்றாரு?" -

எல்லாம் கேட்டுக் கிட்டுத்தான் வரேன் சார்! வந்து இறங்கினதும் இறங்காததுமா உங்க மனசையும் சின்ன ராஜா மனசையும் கஷ்டப்படுத்தற மாதிரி விஷயமாச் சொல்ல வேண்டியிருக்கேன்னுதான் வருத்த மா யிருக்குங்க..." । 'அதுக்கு நீ என்னப்பா பண்ணுவே நடந்திருக்கிற விஷயத்தைத் தானேப்பா நீ சொல்ல முடியும்? எங்க மனசு கஷ்டப்படாம்ே இருக்கணும்கிறதுக்காக நடக்காததை

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/30&oldid=553002" இலிருந்து மீள்விக்கப்பட்டது