பக்கம்:கற்சுவர்கள்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 29

இட்டுக் கட்டிச் சொல்லவா முடியும். செத்துப் போன

மகாராஜா பிழைச்சு உயிரோட வந்துட்டதாகச் சொல்லு' வியா? அல்லது அரண்மனை கஜானாவிலே ஐம்பது கோடி ரூபாய் எப்பிடிச் செலவழிக்கிறதுன்னு தெரியாமக் குவிஞ்சு கெடக்கு சார்னு பொய் சொல்வியா? நிஜமா நடந்ததைத் தானே நீ சொல்ல முடியும்? நிஜமா நடந்தது எல்லாம் கசப்பாவும் கஷ்டமாவுந்தான் இருக்கும். நீ பயப்படாமே நடந்ததைச் சொல்லிகிட்டு வா ஆவுடையப்பன்! எங்க மனசு ஒண்ணும் அதைக் கேட்டுக் கஷ்டப்பட்டுடாது. மனசுக்கு நல்ல 'வு:ாக் அப்ஸ்ார்பர் போட்டு ஆடாம அதிராம வச்சுக் கிட்டிருக்கோம் நாங்க. கவலைப்படாமச் சொல்லு நீ' என்றார் மாமா.

'மகாராஜா காலமான அன்னிக்கே அரண்மனைக் குள்ளாரப் பலதும் பலவிதமா நடந்து போச் சுங்க. அரண் மனைக் காரியஸ்தர் உஷாராகிச் சுதாரிச்சுக்கிட்டுப் பெரிய ராஜாவோட டிரஸ்ஸிங் ரூம், படுக்கை அறை, அலமாரிகள், பீரோக்கள் எல்லாத்தையும் பூட்டி சீல் வைக்கிறதுக் குள்ளேயே நிறையத் திருட்டுப் போயிட்டதுங்க. கடைசி யிலேகூட அரண்மனைக்குள்ளாரப் போலீஸ்ைக் கூட்டி யாந்து தான் சேர்வைக்காரரு எல்லாத்தையும் பூட்ட முடிஞ்சிச்சு!'

'திருடினவங்க யாரா இருக்கும்னு நெனைக்கிறே ஆவுடையப்பன்?’’ - -

'வேற யாரு? வெளியில் இருந்தா அரண்மனைக் குள் ளர்ரத் திருடிப் போட்டுப் போகணும்னு ஆட்கள் வரப் போறாங்க? எல்லாம் உள்ளேயே இருக்கிறவங்க செஞ்ச, வேலைதான். அகப்பட்டவரை கருட்டிக்கிட்டது.மிச்சம்னு

சுருட்டிக்கிட்டாங்க. பெரிய ராஜாவோட பிரதேத்தை முகப்பிலே ராஜராஜேஸ்வரி ஹால்லே கொண்டாந்து ஐஸ் அடுக்கிப் பொதுக்களோட பார்வைக்கு வச்சிட்டுக் காரியஸ்தர் மறுபடி உள்ளே திரும்பிப் போறதுக்கு முன்னே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/31&oldid=553003" இலிருந்து மீள்விக்கப்பட்டது