பக்கம்:கற்சுவர்கள்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

30 கற்சுவர்கள்

ஒரு பெரிய தீவட்டிக் கொள்ளையே அடிச்ச மாதிரி சாம்ான்கள் பறிபோயுடிச்சு...' . . . . .

உங்க பெரிய ராஜா ஏதாச் சும் கொஞ்சமாவது வச்சிட்டுப் போயிருக்காரா ஆவுடையப்பன்' -

'என்னத்தை வச்சிருக்க விட்டிருக்கப் போறாங்க? எல்லாத்தையுந்தான் சினிமாக்காரிகள் உறிஞ்சியிருப்பாங் களே! நிறையக் கடனைத்தான் வச்சிருப்பாரு!’

"கேட்டுக்கோ தம்பி! 2.னக்குத்தான், உங்கப்பா எதைச் சேர்த்து வச்சிருக்கார்ன்னு கேட்டியில்லே?"

ஆவுடைப்பனைக் கேட்டு விசாரிசிசுத்தான் இதைத் தெரிஞ்சுக்கணுமா மாமா? நமக்கே தெரிஞ்சுருக்கிற விஷயம் தானே இது?" -

""ப்ரீவீ பர்ஸ் நின்னப்புறம் கூட அவரோட ஊதாரிச் செலவுகளை அவர் நிறுத்தலேன்னு தெரியறது. நல்ல மனுஷனா இருந்தா ராஜமான்யம் நிறுத்தப்பட்டதுக்குப் பின்னாடியாவது திருந்தியிருக்கணும். இவர் அப்பவும். திருந்தலே..." - - . . . . -

"இவர் திருந்த மாட்டார் என்ற ஏக்கத்திலேதான் அம்மாவே ஏங்கி ஏங்கிச் செத்துப் போனாங்கறதை மற துட்டீங்களா மாமா?’’ - ‘. . . ; கார் மதுராந்தகத்தைக் கடந்து திண்டிவனத்தை நெருங்கிக் கொண்டிருந்தது. -

பெட்ரோல் பங்க்லே கடன் சொல்வித்தான் டாங்க ஃபுல் பண்ணிக்கிட்டுப் புறப்பட்டேன் சார். சேர்வை காரரே பெட்ரோல் பங்குக்கு ஃபோன் பண்ணிக் கெஞ்ச, வேண்டியதாப் போச்சு. வேறொரு சமயமா இருந்தா அவனும் நிர்த்தாட்சண்யமா மாட்டேன்னிருப்பான். சாவு: காரியம்கிறதுனாலே போனாப் போகுதுன்னு சம்மதிச் சான். ஊர்லே ஜவுளிக்கடை, பலசரக்குக் கடை. பூக்கடை. பழக்கடை எல்லாத்திலியும் அரண்மனைக் கணக்கிலே. கழுத்து முட்டக் கடன் இருக்கு." - x

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/32&oldid=553004" இலிருந்து மீள்விக்கப்பட்டது