பக்கம்:கற்சுவர்கள்.pdf/33

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 吕夏

'அப்போ மகாராஜா, தம்பிக்குக் கழுத்து முட்டக் கடனைத்தான் சேர்த்து வச்சிட்டுப் போயிருக்காருன்னு சொல்லு!" -

"நான் சொல்லித்தான் தெரியனுமா என்ன? எல்லா ருக்கும் ஏற்கெனவே தெரிஞ்ச விஷயந்தானுங்களே?'

'கடைசிக் காலத்திலே வீடு வாங்கி பேச்சுக் குலாவி னாரே, அந்த சினிமாக்காரி அவ. இப்போ இங்கே அழ லந்திருக்காளா அப்பா? . .

'வ்ராமேயா, பின்னே? அதுதான் சித்தே முந்திப் பேப்பர்லே படிச்சீங்களே; டைரக்டர் கோமளிஸ்வரன் தலைமையிலே நட்சத்திரங்கள் பீமநாதபுரம் விரைகிதார் கள்’னு. எல்லோரும் வந்து ஒரு "கஸ்ட் ஹவுஸ் நிறைய டேரா அடிச்சிருக்காங்க சார். -

'உங்க தாத்தா விஜய மார்த்தாண்ட பீமநாத பூபதி காலமானப்போ பிரிட்டிஷ் கவர்மெண்ட்டோட பிரதிநிதியா டில்லியிலேருந்து வைசிராய் வந்து மலர் வளையம் வச்சாரு. அப்போ நான் சின்னப் பையன். உங்க அப்பா தலை யெழுத்து-சினிமாக்காரிகளும், பட்டணத்து நடுத்தெரு புரோக்கர்களும் வந்து மலர் வளையம் வைக்கணும்னுதான் இருக்கு. மரியாதை கெளரவம் இதுக்கெல்லாம்கூடக் கொடுத்து வச்சிருக்கணும் தம்பீ! இவரு கொடுத்து வச்சது இவ்வளவுதர்ன் போலிருக்கு." -

இதற்கு தனசேகரன், பதில் எதுவும் சொல்லவில்லை. அவன் ஏதோ யோசனையில் ஆழ்ந்திருந்தான். மாமா சிறிது நேரம் கண்ணயர்ந்தார். கார் எவ்வளவு வேகமாகப் போனாலும் ஸிட்டில் சாய்ந்தபடி உட்கார்ந்த நிலையி லேயேகூட நன்றாகக் குறட்டை விட்டுத் தூங்க அவரால் முடியும். தனசேகர்னால் அப்படித் துரங்க முடியாது. சுற்றுப்புறத்தில் சிறிய ஓசை ஒளிகளால் பாதிக்கப்பட்டால் கூட அவனுக்குத் தூக்கம் வராது. அவன் தன்னை ராஜ: பரம்பரை என்றோ பீமநாதபுரம் சமஸ்தானத்தின் இளைய

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/33&oldid=553005" இலிருந்து மீள்விக்கப்பட்டது