பக்கம்:கற்சுவர்கள்.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

. . நா. பார்த்தசாரதி 33

கொடுத்திருந்தார். ஒருவேளை காலஞ்சென்ற பீமநாத புரம் மகாராணிக்கு அப்படி ஒரு வாக்கைக் கொடுத்திரா விட்டாலும் கூடத் தம்முடைய மகளுக்குத் தனசேகரனை விடப் பொருத்தமான வேறு ஒரு மாப்பிள்ளையை டத்தோ தங்கபாண்டியனால் தேர்ந்தெடுக்க முடியப் போவ தில்லை. . . . - -

விழுப்புரம் தாண்டியதும் மாமா தங்கபாண்டியன் தூக்கம் கலைந்து காரில் கண் விழித்தார்.

ஏனப்பா ஆவுடையப்பன், வண்டியிலே கூஜா நிறையக் குடிதண்ணிர் எப்பவும் வச் சி ரு ப் பி யே: இருக்கா?" - - -

'இருக்குங்க! பின்னாடி உங்க காலடியிலே ஒரு பிளாஸ்டிக் கூடையிலே கூஜா நிறையப் பச்சைத் தண்ணி, பிளாஸ்கிலே வெந்நீர் எல்லாம் இருக்கு சார்!"

"என்ன தம் பீ! இன்னுமா உனக்குப் பசிக்கலே? ஊர்

எல்லைக்குள்ளார நுழைஞ்சிட்டா நீ சாப்பிட முடியாது. இப்பவே ஏதாச்சும் சாப்பிட்டோம்னு பேர் பண்ணிட்டாத் தான் நல்லது தம்பி இந்தா, எடுத்துக்க...' என்று

ரொட்டிப் பொட்டலத்தில் ஒரு பகுதியையும், இரண்டு வாழைப் பழங்களையும் தனசேகரிடம் எடுத்து நீட்டினார் upm unfr தங்கபாண்டியன்,

கார் போய்க்கொண்டிருக்கும்போதே பத்து நிமிஷத்தில் அவர்கள் உணவு முடிந்துவிட்டது. மீதி ரொட்டியையும் பிஸ்கட்களையும், வாழைப்பழங்களையும் எடுத்து டிரைவ

ரிடம் கொடுத்து. இன்னிக்கி நீயும் இதைத் தானே சாப்பிடு ஆவுடையப்பா வேறே ஏதாச்சும் ஹெவியா சாப்பிட்டா தாக்கம் வந்தாலும் வந்துடும். அகாலத்தில் காரை ஒட்டிக்

கிட்டு லாங் டிஸ்டன்ஸ்' போறப்பக் குறைவாச் சாப் பிடுறதுதான் நல்லது' என்றார் தங்கபாண்டியன். .

"ஒண்ணும் சாப்பிடாட்டிக்கூட பரவாயில்லிங்க.

எல்லாரும் எதிர்பார்த்துக் காத்துக்கிட்டிருப்பாங்க. உங்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/35&oldid=553007" இலிருந்து மீள்விக்கப்பட்டது