பக்கம்:கற்சுவர்கள்.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 - கற்சுவர்கள்

ரெண்டு பேரையும் சீக்கிரமா ஊர்லே கொண்டுபோய்ச் சேர்த்துடனும்.' ; :

- அப்படிச் சொல்லாதே! முதல்லே சாப்பிட்டுக்கோ, ஒரமா வண்டியை நிறுத்தி வவுத்துப்பாட்டை முடி. அப்புறம் போகலாம்' என்று தங்கபாண்டியன் அவனைச் சாப்பிடச் சொல்லி வற்புறுத்தினார்.

டிரைவர் ஆவுடையப்பன் ரொட்டி, பிஸ்கட், வாழைப் பழம் எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு சாப்பிடுவதற் காகக் கீழே இறங்கப் போனான்.

இந்த இருட்டிலே நீ எங்கே இறங்கிப் போய்ச் சாப் பிடப் போறே? சும்மா முன் சீட்டிலேயே உட்கார்ந்து சாப் பிடுப்பா' என்றான் தனசேகரன். - -

இல்லீங்க...உங்க முன்னாடி எல்லாம் உட்கார்ந்து சாப்பிடறதுக்குக் கூச்சமா இருக்குமுங்க. என்னை என் இஷ்டப்படி விட்டுடுங்க' என்று கீழேயே இறங்கிப் போய் விட்டான் டிரைவர், - :

உங்கப்பாகிட்ட இத்தனை வருசமா வேலை பார்த் தும் அவரோட கெட்ட குணம் எதுவும் தனக்கு வந்துடா மேயும், தன்னோட நல்ல குணம் எதுவும் அவராலே கெட்டுப் போயிடாதபடியும் தப்பினவன் இவன் ஒத்தன்தான் தம்பி... இவனைக்கூட அவர் நல்லபடியா வச்சுக்கலே, நடுநடுவே நான் ஊர் வந்து திரும்பறப்ப எல்லாம் இவன் என்னைப் பார்த்து நானும் உங்க கூட மலேசியாவுக்கு வந்திடறேன் சார்னு சொல்லிக்கிட்டிருந்தான். நான் தான் தெரிஞ்சவங் களுக்குள்ளே வீண் மனஸ்தாபம் வேண்டாமப்பா! நீ இங்கேயே இரு. செலவுக்கு வேணா அப்பப்போ ஏதாவது வாங்கிக்கோ'ன்னு நூறு அம்பதுன்னு குடுத்துக்கிட்டிருந் தேன்' என்றார் மாமா.

எங்கப்பாவுக்கு விசுவாசம், நன்றி எல்லாம் பிடிக்கும். ஆனால் அது பணச் செலவில்லாமே கிடைக்கிற விசுவாசமா இருக்கணும். அவரு யாருக்காகப் பணத்தைத் தண்ணியா

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/36&oldid=553008" இலிருந்து மீள்விக்கப்பட்டது