பக்கம்:கற்சுவர்கள்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி 3 5

வாரி இறைச்சாரோ அவங்களெல்லாம் நன்றி விகவாசமில் லாதவங்களா இருப்பாங்க. இதோ இந்த ஆவுடையப் பனைப் போல விசுவாசமுள்ள ஏழை எளியவங்களுக்கு அவர் ஒண்ணுமே பண்ணியிருக்க மாட்டாரு மாமா. அது தான் அவர் வழக்கம்.' ,

டிரைவர் சாப்பிட்டுவிட்டு வந்து சேர்ந்தான். நிறைய இடங்களில் நெடுஞ்சாலையில் பாலங்கள், ரோடுகளில் ரிப்பேர் இருந்ததால் கரடுமுரடான மாற்று வழிகளில் கீழே இறங்கிக் கார் செல்ல வேண்டியிருந்தது. ஆகவே விரைந்து செல்வது தடைப்பட்டது. - -

முதலில் நினைந்திருந்தபடி நடு இரவு ஒன்றே முக்கால் அல்லது இரண்டு மணிக்கு அவர்கள் பீமநாதபுரம் போய்ச் சேர்ந்து விடலாம் என்பது சாத்தியமர்கவில்லை. உளவிக்குள் அவர்கள் கார் நுழையும் போது மணி இரண்டே முக்கால். அரண்மனையின் பிரதான வாயிலில் நுழையும்போது மணி மூன்று. எங்கோ கோழி கூடக் கூவிவிட்டது. விடியப் போவதற்கு முந்திய குளிர்ந்த காற்றுக் கூட மெல்ல வீசத் தொடங்கிவிட்டது. கார், நேரே அரண்மனை இராஜ ராஜேஸ்வரி விலாச ஹாலின் முகப்பில் போய் நின்றது.

எங்கும் ஒரே அமைதி. ஒரே இருட்டு. அங்கங்கே அரண்மனை விளக்குகள் மரங்கள் செடி கொடிகளின் கன மான அடர்த்தியினிடையே மின்மினிகளாய் மினுக்கின் கொண்டிருந்தன. தொடர்ந்து இரண்டு இராத்திரிகள் கண் விழிப்பு என்பதனால் அங்கங்கே நின்றபடியேயும் உட்கார்ந்த படியேயும், தூண்களில், சுவர்களில் சாய்ந்தபடியேயும் தூங்கத் தொடங்கியிருந்தார்கள். முகப்பில் கார் வந்து நின்ற ஓசையைக் கேட்டு முதலில் காரியஸ்தர் பெரிய கருப்பன் சேர்வையும் அவரைத் தொடர்ந்து அரண்மனை ஊழியர்களும். மு.க் கி யஸ் த ர் களு ம், உறவினர்களும் ஒவ்வொருவராகக் கண்களைக் கசக்கிக் கொண்டு வந்து நின்றார்கள். அவர்களில் மிகச் சிலர் காலஞ்சென்ற பெரிய ராஜாவின் மேல் தங்களுக்கு இருந்த விசுவாசத்தைக்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/37&oldid=553009" இலிருந்து மீள்விக்கப்பட்டது