பக்கம்:கற்சுவர்கள்.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கற்சுவர்கள்

உடைகள் உள்ள அறை, கஜானா அறை, முக்கியமான தஸ்தாவேஜுகள் உள்ள 'டாக்குமெண்ட்ஸ்' ரூம், வெள்ளிப் பாத்திரங்கள். பாத்திரங்கள் எல்லாம் உள்ள ஸ்டோர் ரூம் அனைத்தும் பூட்டி சீல் வைக்கப்பட்டிருந்தன.

லைப்ரரி, ஐம்பொன் சிலைகள், புராதன ஒவியங்கள், வாகனங்கள் எல்லாம் உள்ள கண் காட்சி சாலை மட்டும் சீல் வைக்காமல் சும்மா பூட்டப்பட்டிருந்தது.

பெண்கள் பகுதியான அந்தப்புரத்திற்குள் அவர்கள் போகவில்லை. ஆனாலும் கண்விழித்து அவர்கள் அரண் மனைக்குள் வருவதை அந்தப்புரத்தில் ஏதோ ஒரு ஜன்னல் வழியாகப் பார்த்துக்கொண்டிருந்துவிட்ட யாரோ ஒர் இளையராணி தூங்கிக் கொண்டிருந்த அத்தனை பேரையும், 'சின்னராஜாவும் அவரு தாய் மாமனும் வராங்க. என்று பரபரப்பாகச் சேதி சொல்லி எழுப்பி விட்டு விட்டாள். - - -

ஒரு பெரிய பெண் கூட்டம் பல்வேறு வயதுகளில் குழந்தை குட்டிகளுடன் வந்து சூழ்ந்து கொண்டது. சிலர் மகாராஜா இறந்ததற்காக அழுதனர். இன்னும் சிலர் தங்கள் எதிர் காலம் என்ன ஆகுமோ என்று அழுதனர். அவ்வளவு பேரும் தன் தந்தையின் விதவைகளைப்போல் காட்டிக் கொள்ள முயன்றாலும் அவர்கள் மனம் அப்படி எதையும். யாரையும் இழந்து விட்டது.போன்ற நிலைமை யில் இல்லை என்பது தனசேகரனுக்குத் தெரிந்தது. தங்களை இளையராஜாவுக்குப் பிடிக்காது என்று அதில் பலருக்குத் தெரிந்தே இருந்தது. ஆனாலும் சித்திமுறை கொண்டாடித் தனசேகரனைக் கட்டி அழ வந்த சிலரை மாமா தங்கபாண்டியன் குறுக்கிட்டுத் தடுத்துவிட்டார். 'அவன் இந்தக் காலத்துப் பையன்! இந்தக் கட்டியழற தெல்லாம் அவனுக்குப் பிடிக்காது. தெரியவும் தெரியாது. தயவு பண்ணி அவனை விட்டுடுங்க' என்று அந்தப் பெண் பிள்ளைக் கும்பலிலிருந்து அவனை விடுவித்து மீட்டுக் கொண்டு வந்தார் மாமா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/40&oldid=1397597" இலிருந்து மீள்விக்கப்பட்டது