பக்கம்:கற்சுவர்கள்.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நா. பார்த்தசாரதி @g、

நல்ல வேளை மாமா நீங்க கூட வந்ததாலே பிைழச்சேன்' என்றான் தனசேகரன்.

"சித்தியாவது ஒண்ணாவது? அதிலே பலபேருக்கு உனக்கு அக்கா தங்கை இருந்தாங்கன்னா அவங்களுக்கு ஆகியிருக்கிற வயசுகூட இருக்காது. சும்மா பாவ லாப் பண்றாங்க. ரொம்ப ஆபத்தான கூட்டம் இது. அப்பா காரியம் முடிஞ்சதும் தலைக்கு ஏதோ ஆயிரம், இரண்டா யிரம்னு குடுத்தாலும் சரி இவர்களை வெளியே அனுப்பிச்சு வச்சிடனும். இல்லாட்டித் தாங்க முடியாது.' \ "அப்பா திவாலானதே இளையராணி இளைய ராணின்னு இப்படி ஒரு மந்தையை அரண்மனைக்குள்ளே சேர்த்ததாலே தான் மாமா." -

'விட்டுத்தள்ளு தம்பி செத்துப் போனவங்க யாரா னாலும் அவங்க தெய்வத்துக்குச் சமானம்பாங்க. நல்ல வரோ கெட்டவரோ உங்கப்பா போயிட்டாரு. போன மனுஷனோட குறைகளைப் பத்திச் சொல்லிக்கிட்டே இருக்கிறதிலே அர்த்தமில்லே. இதை எல்லாம்பத்தி நீயும் நானும் நாட்கணக்கா, வாரக் கணக்கா, மாதக்கணக்கா, வருஷக்கணக்காகப் பேசி அலுத்தாச்சு. இனிமே நடக்க வேண்டியதைக் கவனிப்போம் வா. நடந்த கதைகளைப் பேசிக்கிறதாலே ஒரு சல்லிக்குக்கூட பிரயோசனமில்லை தம்பி!' - - -

அவர்கள் இருவரும் அரண்மனையிலிருந்து வெளி யேறிக் கஸ்ட் ஹவுஸ் முகப்பிற்கு வந்ததும் மின்னுகிற சில்க் ஜிப்பாவும் வெற்றிலைச் சிவப்பேறிய உதடுகளுமாக ஓர் இரட்டை நாடி மனிதர் பெரிய கும்பிடாகப் போட்டுக் கொண்டே எதிரே வந்தார்.

"இதோ எதிரே வர்ரானே, இவன்தான் டைரக்டர் கோமாளிஸ்வரன்! தெரியுமில்லே?" -

"தெரியும் மாமா ஒரு தடவை பார்த்திருக்கேன்."

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/41&oldid=553013" இலிருந்து மீள்விக்கப்பட்டது