பக்கம்:கற்சுவர்கள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:శ్రీః கற்சுவர்கள்

'தர்மானது. ஏரிக்கு நடுப்பகுதியில் உள்ள அந்த மாளிகை வாயில் வரை நடந்து செல்வதற்கும், கார், வாகனங்கள் செல்வதற்கும் பாலம்போல அழகான சிமெண்டுச் சாலை ஒன்றும் இருந்தது, அந்தச் சாலை வழியே பேசிக்கொண்ட்ே 'நடந்துதான் மர்மா தங்கபாண்டியனும், தனசேகரனும் அப்போது அங்கே வந்திருந்தார்கள்.

பணி நிறைந்த அந்தப் பின்னிரவில் எழுதி வைத்த சித்திரம்போல அந்த வசந்த மண்டப விருந்தினர் விடுதி அமைதியாக இருந்தது.

"சங்கதியைக் கேட்டியா தம்பி! நீயும் நானும் மலேசியாவிலிருந்து புறப்பட்டு வரலேன்னா ஏதாவது: பாத்திரம், பண்டம், நகை நட்டுக்களை அடகு வச்சுத் 'தான் உங்கப்பாவோட காரியமே நடக்கணும்னாரு சேர் 'வைக்கார்ரு. அப்புறம் நான்தான் மெட்ராஸ்லே ஏர் போர்ட்டுக்குக் கொண்டாரச் சொல்லி வாங்கியாந்த 'ள்'மவுண்ட்லேருந்து கொஞ்சம் கேஷ் எடுத்துக் குடுத்திருக் கேன்’ என்று மாமா உள்ள நிலைமையைத் தனசேகர னிடம் சொல்லிக்கொண்டிருந்தார். -

'மாமா! எதுக்கும் கொஞ்ச சிக்கனமாகவே செல. அக்குக் குடுங்க. தாராளம் காண்பிச்சிங்கன்னா எல்லாரு. ம்ாச் சேர்ந்து ஆளை முழுங்கிடுவாங்க' என்று தன சேகரன் அவரை எச்சரித்தான். -

இதிலே என்ன தம்பி சிக்கனம் பார்க்க முடியும்?" செத்துப்போனவருக்குச் செய்யிற காரியங்களிலே ஒண்ணும்

குறைவு வைக்க வேண்டாம்னு பார்க்கிறேன். அந்தக். காரியங்கள்ளாம் முடிஞ்சப்புறம்தான் நீயும் நானும் இங்கே பலபேரை விரோதிச்சுக்கிட்டாலும் பரவாயில்லேன்னு. நாம போல்டா பலதைச் செய்ய வேண்டியிருக்கும். சில விஷயங்களை முடிவு கட்டவே வேண்டியிருக்கும். அதுக்கெல்லாம் நிறைய எதிர்ப்பு வரும்." : -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:கற்சுவர்கள்.pdf/44&oldid=553016" இலிருந்து மீள்விக்கப்பட்டது